“அங்காரகன்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

ஜூலியன் அண்ட் ஜெரோமோ இன்டர்நேஷனல் சார்பாக ஜோமன் ஃபிலிப் – ஜீனா ஜோமோ தயாரிப்பில், மோகன் டச்சு இயக்கத்தில், சத்யராஜ், ஸ்ரீபதி நடிக்கும் படம் ‘அங்காரகன்’.

நியா, ரெய்னா காரத், ‘அங்காடித்தெரு’ மகேஷ், அப்புக்குட்டி, ரோஷன் உதயகுமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

கருந்தேள் ராஜேஷ் வசனம் எழுதியுள்ளார். பாடலாசிரியர் கு.கார்த்திக் இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு செய்து மோகன் டச்சு இயக்கியுள்ளார்

நீண்ட நாட்கள் பிறகு சத்யராஜ் தனது பாணியில் நடிப்பில் மிரட்டி இருக்கும் படம்.

பேய், ஆவி, மர்மம், திரில்லர், முன் ஜென்மம் என அனைத்தும் சரியான அளவு கலந்து உருவாக்கப்பட்டுள்ள படம்.

மூன்று இளம் நாயகர்கள் ( ஶ்ரீபதி, அங்காடி தெரு மகேஷ், ரோஷன் உதயகுமார் )

இவர்கள் ஜோடியாகவும், தோழிகளாகவும் இளம் பெண் நட்சத்திரங்கள், நடுவயது மிலிட்டரி தம்பதி, ரிசார்ட் செக்யூரிட்டி அப்புக்குட்டி, அவருடன் ஒரு மாமி, ரிசார்ட் இன்சார்ஜ், ஒரு பெண் எழுத்தாளர் ஆகியோர் ரிசார்ட்டில் ஒரே சமயம் கதைக்களத்தில் பயணிக்கிறார்கள்.

ஆரம்பமே முன் கதையாக, பிரிட்டிஷ் ராணியால் குறிஞ்சி மலைவாழ் பகுதி வஞ்சகமாக அங்கு வசிக்கும் அனைவரையும் கொன்று குவித்து, அதே இடத்தில் ராணிக்கு குறிஞ்சி ரிசார்ட் உருவாக்கப்படுகிறது.

இன்றைய சூழ்நிலையில் குறிஞ்சி ரிசார்ட்டில் ஶ்ரீபதி – நியா ஜோடி தேன்நிலவுக்காக வருகிறார்கள்.

ரோஷன் உதயகுமார் தன் தோழி மற்றும் அவளது தோழி ரெய்னா காரத்துடன் அங்கு தங்குகிறார்.

ரிசார்ட் உரிமையாளர் மகள் ரிசார்ட்டை சீரமைக்க மேனஜர் வேண்டும் என்று அங்காடி தெரு மகேஷை நியமிக்கிறார்.

மூன்று இளம் ஜோடிகள் ரொமான்ஸ் நடக்கும் சமயம், பெண் எழுத்தாளர் அங்கிருந்து காணாமல் போகிறார். அடுத்ததாக ரோஷனை காதலிக்கும் ரெய்னா காரத் காணாமல் போகிறார்.

இந்த வழக்கை விசாரிக்க சத்யராஜ் வருகிறார். ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரணை செய்யும் போது பல திடுக்கிடும் தகவல் வருகிறது.

சத்யராஜ் நடிப்பில் அசுரன் அசத்தியுள்ளார். ரொம்ப நாள் விட்டு வைத்த நக்கல், கிண்டல் மீண்டும் கையில் எடுத்து இப்படத்தில் கலக்கி இருக்கிறார்.

நாயகன் ஶ்ரீபதி ஆக்சன், ரொமான்ஸ், நடிப்பு அனைத்திலும் தன் பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார்.

அங்காடி தெரு மகேஷ் தனது அனுபவ நடிப்பு மூலம் அவரது கதாபாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளார்.

ரோஷன் உதயகுமார் இளம் நாயகனாக பெண்களை தன் வசப்படுத்தும் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தியுள்ளார். இவர் உடல்மொழி, இளமை, நடிப்பு இளம்பெண்களை நிச்சயம் கவரும்.

நியா படத்தின் நாயகி இளமையும் அழகும் ரசிகர்களை சுண்டி இழுக்கும். தமிழ் திரை உலகுக்கு நல்ல வரவு.

ரெய்னா காரத் இப்படத்தில் இரட்டை வேடம் இரண்டிலும் அற்புதமாக நடித்துள்ளார். இவரது அழகு ரசிகர்களை வசப்படுத்தும்.

ரிசார்ட் உரிமையாளராக வரும் நாயகியும் சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அப்புக்குட்டி தன் நடிப்பின் மூலம் சிறப்பு செய்துள்ளார்.இப்படத்தில் நடித்துள்ள அனைவரும் ரசிக்கும்படி நடித்துள்ளனர்.

யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட் அடிக்கடி நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

நினைத்து பார்க்காத திகில் கதை. அடுத்த காட்சி என்ன என்று தீர்மானிக்க முடியாத திருப்பங்கள் நம்மை ரசிக்க வைக்கிறது.

தமிழ் படங்களில் பல நூறுபாடல்கள் எழுதியுள்ள கு. கார்த்திக் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியது மட்டுமில்லாமல் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசை பிரமாதம்.

இயக்குனர் மோகன் டச்சு இப்படத்தின் ஒளிப்பதிவு பணியையும் சேர்த்து செய்துள்ளார். மிக சிறப்பாக கதை, ஒளிப்பதிவு & இயக்கம் என கலக்கி இருக்கிறார்.

கருந்தேள் ராஜேஷ் வசனம் படத்திற்கு உயிரோட்டம்.

திரைக்கதை படத்தின் நாயகன் ஶ்ரீபதி அற்புதமாக கவனித்துள்ளார்.

திரில்லர் – ஹாரர் திரைப்பட ரசிகர்களும், இன்றைய தலைமுறைக்கும் இப்படம் நல்ல பொழுதுபோக்கு விருந்து.

படத்தொகுப்பும் – கலை இயக்கமும் படத்திற்கு கூடுதல் பலம்.

ஆரம்பம் முதல் முடிவு வரை அனைவருக்கும் பிடிக்கும் அம்சங்கள் அனைத்தும் அமைந்துள்ள படம் “அங்காரகன்”.

Angaaragan movie cast & Crew :-

Hero : Sreepathy as Rohith

Heroine : Niya as Diya (Rohith wife)

Villain : Sathyaraj as Adhiveerapandian

Supporting character : Angadi theru mahesh as shiva (Resort manager)

Supporting : Appukutty as pavadaisami (security )

Supporting character : K C Prabath as Manikandan (Resort incharge)

Supporting character : Reina Karad as Poojitha & Queen Renita Martin

Technicians
Cinematography & Direction : Mohan Dachu

Lyrics & Music : ku Karthik

Writer : Karundhel Rajesh

Screenplay : Sreepathy

Editor : valar Pandian

Stunt master : Jackie Jackson

Art Director : k Madhan

PRO : A John

Production Designer : L Vivek

Production Excutive : S Christy

#angaraganmoviereview #angaraganmovie  #angaraganreview #angaragan #fdfs #tamilmoviereview #moviereview #movie #review @audience #theatre #audiencereview #theatrereview #boxoffice #film #cinema #flick #fans

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author