“அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்ரீதர் மாஸ்டர்!

“அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்ரீதர் மாஸ்டர்!

நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் சில நாட்களுக்கு முன் தளபதி விஜய்க்கு ரசிகனின் ரசிகன் என்ற ஆல்பம் பாடலை சமர்ப்பணம் செய்திருந்தார். அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து “அண்ணே வெயிட்டு வெயிட்டு” என்ற ஆல்பம் பாடலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சமர்ப்பணம் செய்யப் போவதாகவும் அதற்கான பணிகள் நடந்துகொண்டு இருப்பதாகவும் அறிவித்து இருந்தார்.

தற்போது அந்த “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் திருநங்கைகள் பங்கேற்று, அந்தப் பாடலில் தங்களது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை ஸ்ரீதர் மாஸ்டர் கொடுத்த வாய்ப்பு வழியாக நிறைவேற்றிக் கொண்ட செய்தி வெளியாகி உள்ளது. இதுபோல பாகுபாடின்றி எல்லா மனிதர்களையும் அரவணைத்து, ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் எஸ். தணிகைவேல் மற்றும் பாரத் யுனிவர்சிட்டி போன்ற நல் உள்ளம் கொண்டவர்களின் உறுதுணையோடு ஸ்ரீதர் மாஸ்டர் உருவாக்கி வரும் இந்தப் பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் பெரிதும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

You May Also Like

More From Author