“அநீதி” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் சார்பாக எம்.கிருஷ்ண குமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், ஜி.வசந்தபாலன் ஆகியோர் தயாரிப்பில், ஜி.வசந்தபாலன் கதை – இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், அர்ஜூன் தாஸ் – துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் “அநீதி”.

 

அர்ஜுன் தாஸ் திருமேனி என்ற கதாபாத்திரத்திலும், துஷாரா விஜயன் சுப்புலட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் காளி வெங்கட், வனிதா விஜயகுமார், அர்ஜூன் சிதம்பரம், பரணி, JSK சதிஸ்குமார், சா ரா, அறந்தாங்கி நிஷா, சிவா, பாவா லக்ஷ்மணன் போன்ற பலர் நடித்துள்ளனர்.

சென்னையில் ஒரு உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் திருமேனி அவருக்கு யாரைப் பார்த்தாலும் கொல்ல வேண்டும் என்கின்ற ஒரு வித மனநோய்யில் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் சுப்புலட்சுமியை பார்த்ததும் அவருக்கு அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது. சுப்பு ஒரு பணக்கார வீட்டில் வயதான பாட்டியை பார்த்துக் கொள்ளும் வேலை பார்த்து வருகிறார். அங்கு அவள் கொத்தடிமை போல் நடத்த படுகிறாள். அவர்களது மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். எதிர்பாராத விதமாக அந்த பாட்டி இறந்துவிட, அது இயற்கை மரணம் அல்ல என தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன ஆனது என்பதே அநீதி படத்தில் கதை.

வழக்கம்போல வசந்தபாலன் ஒரு எளிய மக்களின் கதையை படமாக எடுத்துள்ளார். எந்தவித சினிமா தனமும் இல்லாத ஒரு எதார்த்தமான திரை கதையின் மூலம் மீண்டும் அசத்தியுள்ளார். வில்லனாக மிரட்டி இருந்தாலும் அர்ஜுன் தாஸ் அநீதி படத்தில் ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஒரு முழு நீள படத்தை தாங்கி பிடிக்கும் அளவிற்கு ஒரு தேர்ந்த நடிகராக மாறி உள்ளார். எமோஷனல் காட்சிகளிலும் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் சிறப்பாகவே நடித்துள்ளார். துஷாரா விஜயன் நம் பக்கத்து வீட்டு பெண் போல் தனது நடிப்பால் உணர்த்துகிறார். இரண்டாம் பாதி முழுக்கவே அழுது கொண்டும், என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடும் அந்த முகபாவனையும் சுப்பு என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.

இரண்டாம் பாதியில் சிறிது நேரமே வரும் காளி வெங்கட் கண்கலங்க வைக்கிறார், அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் அன்பு அனைவரையும் ஈர்க்கிறது. சா ரா மற்றும் பரணி தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளனர். வனிதா விஜயகுமார் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் கதையில் என்ட்ரி ஆன பின்பு திரைக்கதை சூடு பிடிக்கிறது. பணக்காரர்கள் ஏழை மக்களை எவ்வாறு நடத்துகின்றனர் என்பதை வசந்த பாலன் அநீதி படத்தின் மூலம் அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.

ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் பெரிதாக ஹிட் அடித்துள்ளார் பின்னணி இசை கதைக்கு தேவையானது போல் இருந்தது.

“அதிகாரம் கையில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்”, “மன்னிப்பு கேட்கும் போது மன்னிக்காதவன் மனுசன் இல்ல” போன்ற எஸ் கே ஜீவாவின் வசனங்களும் படத்திற்கு கூடுதல் பலம். ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே மற்றும் எடிட்டர் ரவிக்குமார் இந்த படத்திற்கு கூடுதல் உழைப்பை கொடுத்துள்ளனர். முதல் பாதி முழுக்கவே பெரிதாக எங்கும் போர் அடிக்காமல் செல்கிறது . இடைவேளை ஒரு முக்கியமான இடத்தில் வருகிறது, அது படத்தை முழுவதுமாக பார்க்கத் தூண்டுகிறது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சாதாரண மனிதர்கள் என்ன செய்வார்களோ அதனை எந்தவித சினிமா தனமும் இல்லாமல் காட்சிப்படுத்தியது அழகு. இரண்டாம் பாதியில் வரும் அதிகப்படியான அடிதடி வன்முறை காட்சிகளை மட்டும் சற்று கம்மி பண்ணி இருந்திருக்கலாம்.

இன்றைய தலைமுறைக்கு மிகவும் பிடிககும் படம் “அநீதி”.

*ANEETHI:* Movie

CAST :-

1. Arjun das – Thirumeni

2. Dushara Vijayan – Subbulakshmi

3. Kaali venkat – siva sankaran

4. Vanitha vijayakumar – Anitha

5. Arjun Chidambaram – Ajee

6. Bharani – Pothi

7. Shaa raa – Bhaskar

8. Aranthangi Nisha – Mangala priya

9. Shantha Dhananjeyan – Mangayarkarasi

10. T. Siva – Suyambulingam

CREW: :-

Written & Directed by : G.Vasanthabalan

Cinematographer: Edwin Sakay

Music director : G. v. prakash kumar

Dialogues : S. K. Jeeva

Editor : Ravikumar.M

Art Director : Suresh Kallery

Line Producer – Nagaraaj Rakkapan

Executive producer : J. prabaahar

Banner : Urban Boyz Studios

Produced by : M.Krishna Kumar, Murugan Gnanavel, Varadharajan Manickam, G.Vasanthabalan

PRO: Nikil Murukan

#aneethimoviereview #aneethimovie #aneethireview #aneethi #fdfs #audience #theatre #moviereview #movie #review #tamilmoviereview #audiencereview #theatrereview 
"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author