“அயோத்தி” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் சார்பாக ஆர் ரவிந்தரன் தயாரிப்பில், ஆர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் படம் “அயோத்தி”.

யஷ்பால் ஷர்மா பவித்ரமான இந்து அயோத்தியில் தன் மனைவி (அஞ்சு அஸ்ராணி), மகள் (ப்ரீத்தி அஸ்ராணி) மற்றும் மகனுடன் (அத்வைத்) வசித்து வருகிறார். மிகவும் கண்டிப்பான மனிதர், இவரது கண்டிப்பால் குடும்பத்தினர் சித்திரவதை அடைகின்றனர்.

புனித ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு தன் குடும்பத்தினருடன் வருகிறார் யஷ்பால் ஷர்மா தெரியாத மாநிலம், புரியாத மொழி, இந்து மதம் என்ற கர்வம், யாரையும் மதிக்காத குணம் என இருக்கிறார்.

 

இந்நிலையில், எதிர்பாராத விதமாக அவரது மனைவி விபத்தில் இறந்து விடுகிறார். உதவ யாரும் இல்லாத நிலையில் தான் ஊர் அயோத்தி கொண்டு செல்ல கையில் சரியான பணம் இல்லை.

இவ்வேளையில், சசிகுமார் உதவ வருகிறார் அவருடன் குக் வித் கோமாளி புகழும் உடன் வருகிறார்.

ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு ஒரு பிரேதத்தை விமானத்தின் மூலமாக அனுப்பி வைக்க எத்தனை விதிமுறைகள் என்பதை புள்ளிவிவரங்களை தெளிவாக இப்படம் நமக்கு காட்டுகிறது.

மதம், இனம், மொழி, மாநிலம் கடந்து மனிதநேயம் என்ற ஒன்றை இப்படம் அனைவருக்கும் ஆணி அடித்தது போல் சுட்டிக்காட்டி இருக்கிறது.

முக்கிய வேடத்தில் நடித்த ஆறு பேரையும் பாராட்டியே ஆகவேண்டும். இவர்கள் மட்டுமில்லாமல் நடித்த அனைவரும் இப்படத்திற்கு சிறப்பு செய்துள்ளனர்.

சசிகுமாரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். மகள் ப்ரீத்தி அஸ்ரானி அமைதியாக நடித்து ஒரு காட்சியில் வெடித்து எழும் போது நடிப்பில் மிரட்டி இருக்கிறார். யஷ்பால் ஷர்மா அனைவரின் திட்டுகளை தன் நடிப்பு திறமையால் பெறுகிறார் அதே சமயம் தன் தவறை உணர்ந்து அழும் காட்சி சிறப்பாக செய்துள்ளார்.

அதே போல், புகழ் இப்படத்தில் நகைச்சுவை செய்யாமல் குணசித்திர வேடத்தில் அருமையாக நடித்துள்ளார். மனைவியாக நடித்தவரும், மகனாக நடித்த சிறுவனும் சிறப்பு செய்து இருக்கிறார்கள்.

கதைக்களம், சமூக அக்கறை செய்தி, திரைக்கதை, வசனம், இயக்கம் அருமை. இசையமை்பாளர் ரகுநந்தன் பாடல், பின்னணி இசை மிக சிறப்பு. ஒளிப்பதிவு அபாரம்.

இந்த வருடத்தில் இது வரை வந்த படங்களில் அயோத்தி மிக சிறந்த படம்.

 

CAST:

 

Sasi Kumar – (Abdul Malik)

Yashpal sharma – (Balram)

Preethi Asrani – (Shivani)

Pugazh – (Pandi)

Anju Asrani – (Janaki)

Advaith (Child) – (Sonu)

 

CREW:

 

Director: R.Manthira Moorthy

Producer: R.Ravindran

Banner: Trident Arts

DOP: Madheshmanickam

Music: N.R Ragunanthan

Editor: San Lokesh

Art director: G.Durai Raj

Stunt: Dinesh Subbarayan

Choreography: Sherif

Costume designer: Keerthi Vasan

Audiography: Ghatam Siva

VFX: Mahi

PRO: Nikil

Executive Producer: Linda Alexander

Publicity designer: Thandora

Music label – Sareegama

Production Coordinator: S.Jayaraman

Production controller: T. Selvaraj

Production Executive: S.N. Asraf

Production Manager: D. Baskar

Creative – Marketing: J. Hariharan

Subtitles: Rekhs

Colourist: K.Arun Sangameshwar

#ayothimoviereview #ayothimovie @ayothireview #moviereview #tamilmoviereview #movie #review #film #flick #cinema #fdfs #ayothi #அயோத்தி

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author