“அழகிய கண்ணே” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

எஸ்தெல் எண்டர்டெய்னர் நிறுவனம் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஆர்.விஜயகுமார் (இயக்குனர் சீனு ராமசாமி தம்பி) இயக்கியுள்ள படம் ‘அழகிய கண்ணே’. இந்த படத்தில் ஹீரோவாக பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார், ஹீரோயினாக சஞ்சிதா ஷெட்டி,.

சிறப்பு தோற்றத்தில் இயக்குநர் பிரபு சாலமன், நடிகர் விஜய் சேதுபதி என பலரும் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லியோ சிவக்குமாருக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையாக உள்ளது. ஊரில் புரட்சி நாடகங்களை நடத்தும் அவர் மீது எதிர் வீட்டு ஐயர் பெண்ணான சஞ்சிதா ஷெட்டி காதல் கொள்கிறார். இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராக சேர லியோ சிவக்குமாரும், வேலை காரணமாக சஞ்சிதாவும் சென்னைக்கு வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் எதிர்ப்புகளுக்கு இடையே இருவரும் திருமணம் செய்துக் கொள்கின்றனர். குழந்தையும் பிறக்கிறது. ஆனால் லியோ சிவக்குமார் இயக்குநராக முயற்சி செய்யும் நிலையில் குடும்பச்சூழல் காரணமாக குழந்தையை அருகில் இருந்து சஞ்சிதாவால் கவனிக்க முடியாமல் போகிறது. எதிர்பார்த்தபடி லியோ இயக்குநர் ஆனாரா? சஞ்சிதாவின் குடும்ப பொறுப்பு ஆசை நிறைவேறியதா? என்பதை சிந்திக்க கூடிய காட்சிகளுடன் ‘அழகிய கண்ணே’ படம் எடுத்துரைக்கிறது.

நாயகனாக அறிமுகமாகியுள்ள லியோ சிவக்குமார் சிறப்பாக நடனம், சண்டை, வசனம் பேசி நடித்துள்ளார் முக பாவனை மற்றும் உடல் மொழி கவனம் செலுத்த வேண்டும்.

சஞ்சிதா ஷெட்டி ஐயர் பெண்ணாக தன் அனுபவ நடிப்பால் சிறப்பாக நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர்கள் சிங்கம்புலி, அமுதவாணன், ஆண்ட்ரூஸ், இயக்குநர் சக்தி சரவணன், முல்லை ஆகியோர் இருந்தும் சிரிப்பு எடுபடவில்லை.

வில்லனாக வரும் சஞ்சிதாவின் முறைப்பையன் வெறும் காட்சிப் பொருளாக இருந்தது தவிர வில்லனுக்கு உண்டான போதிய வலிமை அவரது கதாப்பாத்திரத்தில் இல்லை.

ஒரு காட்சியே வந்தாலும் நமோ நாராயணா சிறப்பு.

நாயகன் தாயாக வரும் சுஜாதா, தங்கை, குழந்தையை பார்த்துக் கொள்ள வரும் பாட்டி நடிப்பு அற்புதம்.

இயக்குனர் பிரபு சாலமன் சிறப்பாக நடித்துள்ளார். வில்லனாக இயக்குநர் ராஜ்கபூர் சிறப்பு செய்துள்ளார்.

நாயகியின் தந்தை நடிப்பு சரியாக இல்லை. சித்தி சிறப்பாக நடித்துள்ளார்

ஒளிப்பதிவு அற்புதம். பின்னணி இசை சிறப்பு பாடல்கள் அந்த அளவுக்கு மனதில் பதியும் விதமாக அமையவில்லை.

படத்தொகுப்பு, கலை இயக்கம் மிக அழகு.

கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம் சுமார் ரகம் தான்.

க்ளைமாக்ஸ் காட்சி எதிர்பாராதது. பலருக்கு உடன்பாடிலலை என்று தோன்றும்.

30 ஆண்டுகள் முன் வந்திருக்க வேண்டிய படம். இது போன்று பல நூறு படங்கள் பார்த்து விட்டோம்.

“அழகிய கண்ணே” குடும்பத்துடன் தாராளமாக பார்க்க கூடிய படம்

 

“AZHAGIYA KANNE”

 

BANNER : ESTHELL ENTERTAINER

PRODUCER : Dr. S. XAVIER BRITO

 

Presented by Kannan Ravi Group

 

TECHNICIANS

 

Director : R VIJAY KUMAR

DOP : A.R. ASHOK KUMAR

Music : N.R. RAGUNANTHAN

Editing : E. SANGATHAMILAN

Choreography : I. RADHIKA

Lyrics : VAIRAMUTHU, YUGA BHARATHI, EKADASI

Stunt : Stunt SILVA

Art : VIJAY THENNARASU

Production Manager: ILAYARAJA SELVAM

 

CAST

 

SIVA KUMAR (Hero)

SANCHITA SHETTY (Heroine)

PRABHU SOLMON

SINGAM PULI

RAJKAPOOR

AMUDHAVANAN

ANDROOS

 

CAMEO “VIJAYSETHUPATHI”

#azhagiyakannemoviereview #azhagiyakannemovie #azhagiyakannereview #azhagiyakanne #movie #review #moviereview #tamilmoviereview #fdfs #theatre #audience #audiencereview #theatrereview #film #flick #cinema

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author