“ஆர் யூ ஓகே பேபி” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரிப்பில், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள படம் “ஆர் யூ ஓகே பேபி”

சமுத்திரக்கனி – அபிராமி தம்பதியருக்கு வெகு காலம் ஆகியும் குழந்தை இல்லாததால் முல்லையரசி – அசோக் ஜோடிக்கு லிவிங் டூகெதேர் மூலம் பிறந்த பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்க்கின்றனர்.

தங்களால் குழந்தையை பார்த்து கொள்ள முடியாத நிலை என்பதால், தத்து கொடுக்கும் முல்லையரசி அதன் பின் தன் காதலன் அசோக்கை திருமணம் செய்ய குழந்தை தனக்கு மீண்டும் வேண்டும் என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நடத்தும் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கிறார்.

அதன் பின், நீதிமன்றம் தயவை நாடுகிறார். அப்பாவி சமுத்திரக்கனி – அபிராமி தம்பதியருக்கு சிக்கல் வருகிறது.

தீர்ப்பு யார் பக்கம்? யார் மன நிலை மாறுகிறது? என்பதே  கதை.

பொம்முக்குட்டி அம்மாவுக்கு, தெய்வ திருமகள் படத்தின் கதையை. அதில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ இடையே நுழைத்து வழங்கியுள்ளனர்.

நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இளையராஜாவின் இசை பாடல் ஒன்று தான். பின்னணி இசையில் தனது இராஜாங்கத்தை படைத்துள்ளார்.

அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பங்களிப்பும் சிறப்பு.

பாசப் போராட்டம் ரசிகர்களால் யார்ப் பக்கம் நிற்பது என்று தெரியாமல் திக்கு முக்கு ஆகவைக்கும் படம் “ஆர் யூ ஓகே பேபி”.

நடிகர்கள்

சமுத்திரக்கனி

அபிராமி

லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

மிஸ்கின்

ஆடுகளம் நரேன்

பாவல் நவநீதன்

முல்லையரசி

ரோபோ சங்கர்

அசோக்

அனுபமா குமார்

வினோதினி வைத்தியநாதன்,

தொழில்நுட்ப வல்லுநர்கள்

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார்

டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

இசை: ‘மேஸ்ட்ரோ’ இளையராஜா

ஒளிப்பதிவு: கிருஷ்ணசேகர் டி.எஸ்

எடிட்டிங்: சி.எஸ்.பிரேம்குமார்

#areyouokbabymoviereview #areyouokbabymovie #areyouokbabyreview #areyouokbaby #fdfs

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

 

You May Also Like

More From Author