ஆல் மூவி மீடியேட்டர்ஸ் அசோசியேஷனின் முதல் பொதுக் குழு கூட்டம் சென்னையில் நடைப்பெற்றது

ஆல் மூவி மீடியேட்டர்ஸ் அசோசியேஷனின் முதல் பொதுக் குழு கூட்டம் 24/02/2019, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள M.M.திரையரங்கில் நடைப்பெற்றது.

தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கிய முதலாம் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தை திரு. PLS.பழனியப்பன் தலைமை தாங்கினார்.

மீடீயேட்டர்ஸ்களுக்காக முதன்முதலில் சங்கம் ஆரம்பித்து, இத்துறையை சார்ந்தவர்கள் நலனுக்காக பாடுப்பட்ட அமரர் உயர்த்திரு. P.L.சுப்பிரமணியம் திரு உருவ படத்திறப்பு விழா மூத்த மீடீயேட்டர்கள் மூலமாக திறந்து வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

இந்திய தாய்த்திரு நாட்டிற்காக உயிர் நீத்த 44 இராணுவ வீரர்களுக்கும், முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி,  நடிகை ஸ்ரீதேவி, இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா, முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய், திரு. நாகலிங்கம் ஆகியோரின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த முன்னாள் முதமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மூத்த உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

தலைவர் உரையை இச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் C.V.பன்னீர்செல்வம் வழங்கினார். நிர்வாக உரையை செயலாளர் R. சரவணன் வழங்கினார்.

பொருளாளர் S. வெங்கடேசன் 11 மாதத்திற்கான வரவு செலவு கணக்கு அறிக்கையை சமர்பித்து ஒப்புதல் வாங்கினார். சட்ட ஆலோசகராக இந்த ஆண்டும் வழக்கறிஞர் இமாமுதீன் நியமிக்கப்பட்டார்.

உடந்தை மணவாளன் அவர்களின் மகன் நாசர் வாயிலாக இச்சங்கத்திற்காக “அம்மா டிஜிட்டல் லேப்” துவங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன் மூலம் தயாரிப்பாளர்களுடன் 8 ஆவணங்கள் மூலம் ஒப்பந்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

“அம்மா சோசியல் வெல்ஃபேர் டிரஸ்ட்” ஆரம்பித்து அதன் மூலம் உறுப்பினர்களுக்கு வரும் 2020ஆம் ஆண்டு முதல் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக ரூ.1500 மதிப்புள்ள பரிசு பொருள், உறுப்பினர் வாரிசுகளின் திருமண உதவித் தொகையாக ரூ. 5000 வழங்கவும், உறுப்பினர் மகன்/மகள் கல்வி உதவித் தொகையாக 1ஆம் வகுப்பு முதல் 12வது வகுப்பு வரை ரூ. 1500 முதல் ரூ. 2000 வரையும், பட்டப்படிப்புகாக ரூ. 5000 வழங்க முடிவு செய்யப்பட்டது.

உறுப்பினர்களுக்கு சங்கம் சார்பாக பிரிமீயம் தொகை செலுத்தி பிரதம மந்திரி மற்றும் தமிழக அரசு மருத்துவ காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்திற்கு, மதிஒளி ராஜா, துரைசாமி, துணைத் தலைவர் S. பாண்டிய நெடுஞ்செழியன், துணைச் செயலாளர் V.S. நாராயணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உறுப்பினர் மதிஒளி ராஜா அவர்கள் தனியார் மருத்துவமணையில் உறுப்பினர் குடும்பத்திற்கு இலவச சிகிச்சைக்காக SRM, ACS மற்றும் பாலாஜி மருத்துவமணையை தொடர்புக் கொண்டு மருத்துவ அட்டை வாங்கி தர முற்படுவதாகவும், உறுப்பினர் பிள்ளைகளின் பட்டப்படிப்புக்காக ஐசரி கணேசனின் வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் SRM பல்கலைக்கழகம் நிறுவனத்திடம் முயற்சிப்பதாகவும் கூறினார்.

திரு. துரைசாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் பொதுக் குழு கூட்டம் இனிதே நிறைவேறியது.

இந்த பொதுக் குழு கூட்டத்திற்கான செலவை Trident Arts ரவிச்சந்திரன் வழங்கினார். வந்திருந்த அனைவருக்கும் அருஞ்சுவை விருந்து பரிமாறப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

You May Also Like

More From Author