இன்பினிட்டி (INFINITY) திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

மென்பனி புரொடக்ஷன் சார்பாக V மணிகண்டன், U பிரபு, K அற்புதராஜன்,  D பாலபாஸ்கரன் தயாரிப்பில், சாய் கார்த்திக் இயக்கத்தில், நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகியுள்ள படம் “இன்பினிட்டி”.

 

இன்பினிட்டி (INFINITY) என்றால் முடிவற்ற தன்மை. ஈசிஆர் ரோட்டில் தொடர்ச்சியாக மூன்று கொலைகள் ஒரு வழக்கு விசாரணை ஆரம்பிக்கும் முன் அடுத்து அடுத்து கொள்ளைகள் என சென்னை மாநகரம் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த கொலைகளுக்கு முன்பு வெளிவராத ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டு எரிக்கப்படுகிறார்.

இதனால், போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்து இந்த கொலை வழக்குகள் சிபிசிஐடி கைவசம் வருகிறது. இதை விசாரிக்க சிறப்பு பொறுப்பு நாயகன் நட்டி நட்ராஜிடம் வருகிறது.

இவருக்கு உதவியாக டாக்டர் நந்தினி (வித்யா பிரதீப்) – திருக்கை (தா. முருகானநதம்) இருக்கிறார்கள்.

காவல் நிலையத்தில் தன் மகளை காணவில்லை என புகார் தருகின்றனர் பெற்றோர்கள். அந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் இறந்து போக, இந்த வழக்கும் நட்டியிடம் வருகிறது. போலீஸ் கான்ஸ்டபிள் முனிஷ்காந்த் நட்டியுடன் இணைகிறார்.

வழக்கு, கொலை, விசாரணை, தடயம் என்று படம் விறுவிறுப்பாக நகர்கிறது. அந்த இளம் பெண் மற்றும் இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் கொலை இதன் தொடர்பு என்ன?  கொலைகளுக்கான காரணம் என்ன? நட்டி கொலைக்காரர்களை கண்டுபிடித்தாரா? நாயகன் கூடவே இருந்து துரோகம் செய்தது யார்? என்பதை திரையில் காண்க.

நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், வித்யா பிரதீப் தவிர மற்ற அனைத்து நடிகர்களும் அத்தனை பரிட்ச்சயமானவர்கள் இல்லை.

நட்டி ஒருவர் மட்டுமே படத்தை சுமந்து செல்கிறார். கதை ஓட்டமும், திரைக்கதையும் துணை நிற்கிறது.

பின்னணி இசை அருமை. பாடல்கள் 2 மனதில் நிற்கவில்லை. ஒளிப்பதிவு நிறைய இரவு நேர காட்சிகள் அதனால் நிறைய சவால்கள் ஒளிப்பதிவாளர் ஆளுமை நன்றாக தெரிகிறது.

வசனம் –  இயக்கம் தெளிவு அதிகம் இல்லை.

சில காட்சிகள் குழந்தைதனமாக இருக்கிறது. குறிப்பாக, இறுதிக்கட்ட காட்சிகள். முனிஷ்காந்த் நகைச்சுவை என்ற பெயரில் சொதப்பல். ஃப்ளாஷ்பேக் காட்சி வலிமை குறைந்தது.

மீடியாகாரர்களை அவமதிப்பு செய்வது போன்ற காட்சிகள் தவிர்க்க வேண்டும்.

“இன்பினிட்டி” தனிமனித ஒழுக்கம் வேண்டும் என்று உணர்த்தும் கதை.

 

CAST :-

NATTY NATARAJAN as EVVI ILAVALAVAN

VIDHYA PRADHEEP as Dr.NANDHINI

RAMDOSS (MUNISHKANTH) as ‘WRITER’ SOKKU

THA.MURUGANANTHAM as THIRUKAI

CHARLES VINOTH as ‘INSPECTOR’ SUNDAR

VINOD SAGAR as ARPANA’S FATHER

NIKITHA as ARPANA

JEEVA RAVI as THULASI RAJAN

MONA BEDRE as HEMAVATHI

AADHAVAN as AADHAVAN

SINTHUJA as TAMIZHINI

KRISHNARAJU as GODWIN

BALABASKARAN as ‘MINISTER’ SUBRAMANI

 

CREW :-

 

PRODUCTION COMPANY – MENPANI PRODUCTIONS

PRODUCER – V.MANIKANDAN, U.PRABHU, K.ARPUTHARAJAN & D.BALABASKARAN

Director – Sai Karthik

DOP – Saravanan Srii

Music Director – Balasubramanian.G

Editor – S.N.Fazil

Art director – ‘Piranmalai’ Saravanan

Action master – ‘Stunner’ Sam

Sound Design – Tony.J

Colorist – Sethu Selvam

Stills – Anbu & Jones

Production Design – Ntalkies

Production Controller – S.N.Fazil

Production Manager – Umamaheshwara Raju.D

PRO – NIKIL MURUKAN

#infinitymoviereview #infinitymovie #infinityreview #infinity #moviereview #movie #review #fdfs #audience #theatre

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author