இரவின் நிழல் படத்தின் உருவாக்கத்தின் காட்சிகள் படம் திரையிடும் முன்னர் ஒளிபரப்ப இந்த படத்தை உருவாக்க எவ்வளவு உழைப்பு, வலி, பொறுமை, சிரமம், முயற்சி என இந்த ஒட்டுமொத்த பட குழுவினரால் வழங்கப்பட்டு இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. அதற்காக, உண்மையில் உலக சாதனை விருதை தாராளமாக தரலாம்.
பட உருவாக்க முன்னோட்டத்தை பார்க்காமல், அதைப் பற்றி அறியாதவர்கள் இப்படத்தை பார்த்தால் நிச்சயம் கொஞ்சம் சொதப்பலாக உருவாக்கி உள்ள படம் என எடுத்துக் கொள்வார்கள்.
திரைப்படங்களுக்கு வட்டி பணம் தரும் ஃபைனான்சியர் பார்த்திபன், அவரிடம் பணம் வாங்கி திரும்ப பணம் கொடுக்க முடியாத தயாரிப்பாளர் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள, இதனால் பார்த்திபன் குடும்பம் இவரை விட்டு பிரிந்து செல்கிறது. இவரை போலீஸ் தேடுகிறது.
இவரை கொல்ல இவரது எதிரிகள் வட்டமிடுகின்றனர். இவரது கை ஆட்களே இவருக்கு எதிராக வேலை செய்கிறார்கள். இதனால் இவர் தலைமறைவாகி ஒரு பாழடைந்த சாமியார் மடத்தில் ஒளிந்துக் கொண்டு, தன் கடந்த கால வாழ்க்கையை திரும்பி பார்க்கிறார்.
10 வயதில் அனாதையாக ஆரம்பித்து, இன்றைய சூழநிலையில் கதை சொல்ல படுகிறது. கதையில் புதுமை இல்லை. ஏற்கனவே தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “புதுப்பேட்டை” பட கொக்கி குமார் கதை தான் வேறு விதமாக சொல்லப் படுகிறது.
ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள், பின்னணி இசை மிக சிறப்பு. ஒளிப்பதிவு ஆர்தர் வில்சன் படத்தின் நாயகன் என கூறலாம். திரைக்கதை, இயக்கத்திற்கான மெனகேடலுக்காக ஆர் பார்த்திபன் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும். வித்தியாசமாக தன் ரசிகர்களுக்கு எதாவது புதுமை செய்ய வேண்டும் என யோசிப்பதில் இவருக்கு நிகர் இவரே.
வசனம் மிக மோசம், கூடுதல் மெத்தனபோக்கின் வெளிப்பாடு தெரிகிறது. திரைப்பட ரசிகர்களை ஏளனமாக நினைத்து விட்டார் போல, கண்ட படி (கண்டிக்கும்படி) எழுதி உள்ளார்.
நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் மிக பெரிய பாராட்டுகள். ஒரு பல்கலைகழகத்தில் பயிற்சி பெற்ற அனுபவம் இந்த ஒரு படத்தில் பணிப்புரிந்ததில் கிடைத்திருக்கும்.
இப்படத்தில், ஆர் பார்த்திபன், ரோபோ சங்கர், வரலக்ஷ்மி சரத்குமார் தவிர மற்ற அனைத்து நடிகர்களும் பரிட்ச்சயமாகாத முகங்கள். நடிப்பில் அனைவரும் அசத்தி உள்ளனர்.
கலை இயக்குனர், ஆடை அலங்காரம், ஒப்பனை கலைஞர்கள், உதவி இயக்குனர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள். அரங்க நிர்வாகிகள் என தனித்தனியாக பாராட்ட வேண்டும்.
இரவின் நிழல் திரைப்படம் புதிய முயற்சியை பாராட்ட, ஊக்குவிக்க அனைவரும் பார்க்கலாம். ஆனால் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க முடியுமா? என்றால் கேள்விக்குறி.
இனி ஆர் பார்த்திபன் அவர்கள் கதை, வசனம் எழுத்தும் போது குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என எண்ணி எழுத வேண்டும்.
கதாபாத்திரம் – நடிகர்கள் :-
நந்து : இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
பிரேமகுமாரி : வரலக்ஷ்மி சரத்குமார்
பரமானந்தா : ரோபோ ஷங்கர்
சிலக்கம்மா : பிரிகிடா சகா
18 வயது நந்து : சந்துரு
30 வயது நந்து : ஆனந்த கிருஷ்ணன்
லட்சுமி : சினேகா குமார்
பார்வதி : சாய் பிரியங்கா ரூத்
படக்குழுவினர் :-
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
இசை – ஏ ஆர் ரஹ்மான் (அகாடமி விருது வென்றவர்)
தயாரிப்பு – பயாஸ்கோப் USA, அகிரா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்.
தயாரிப்பாளர்கள் – கால்டுவேல் வேல்நம்பி , அன்ஷு பிரபாகர் , Dr.பாலா ஸ்வாமிநாதன் , Dr. பிஞ்சி ஸ்ரீனிவாசன் , ரஞ்சித் தண்டபாணி , கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி & இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
நிர்வாக தயாரிப்பாளர் – ராக்கி பார்த்திபன்
ஒளிப்பதிவு இயக்குனர் – ஆர்தர் A. வில்சன்
கலை இயக்குனர் – ஆர் கே விஜய் முருகன்
ஒலிக்கலவை – எஸ். சிவக்குமார்
இணை இயக்குனர் – P. கிருஷ்ணமூர்த்தி
பாடல் வரிகள் – கடுவெளி சித்தர் , மதன் கார்க்கி, ராக்கெண்டு மௌலி, & இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
VFX மேற்பார்வையாளர் – கொட்டலங்கோ லியோன் (அகாடமி விருது வென்றவர்)
ஒலி தொகுப்பு மேற்பார்வை – கிரேக் மேன் (அகாடமி விருது வென்றவர்)
ஒலி வடிவமைப்பு மேற்பார்வை – குணால் ராஜன்
லைன் புரொடியூசர் – ஜே பிரபாகர்
கிம்பல் ஆப்ரேட்டர் – A.K.ஆகாஷ்
Focus Pullers – ஷங்கர் (டிசோஸா ), ராஜேஷ்
நடன இயக்கம் – ஷாந்தி குமார் , பாபா பாஸ்கர்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
மதிஒளி ராஜா