“இராவண கோட்டம்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

கண்ணன் ரவி குரூப் சார்பாக கண்ணன் ரவி தயாரிக்க, விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் படம் “இராவண கோட்டம்”

இராமநாதபுரம் ஏனாதி கிராமத்தில் மேலத்தெரு – கீழத்தெரு என இரு பகுதிகள். மேலத்தெரு தலைவராக பிரபுவும், கீழத்தெரு தலைவராக இளவரசும் இருகிறார்கள். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், ஊருக்குள் இருதரப்புக்கும் இடையே நடக்கும் பிரச்சினைகள் பேச்சு வார்த்தையிலேயே தீர்க்கப்பட்டு விடுகின்றன.

அதே போல், மேலத்தெரு சாந்தனுவும், கீழத்தெரு சஞ்சய் சரவணனும் நண்பர்களாக இருகிறார்கள். கயல் ஆனந்தி – சாந்தனு ஊருக்கு தெரியாமல், தன் உயிர் நண்பன் சஞ்சய் சரவணனுக்கு கூட தெரியாமல் மறைமுக காதல். இதனால் ஒரு கை ஆசாமி மாரி அரசியல் ஆசையில் ஊர் ரெண்டு பட வேண்டும் என்று சஞ்சய் சரவணன் மனதில் கயல் ஆனந்தி மேல் காதல் மலர செய்ய அது பெரிய அளவிலான பிரச்சனையை உருவாக்குகிறது.

இந்த நிலையில் கார்ப்ரேட் கம்பெனி ஒன்று அங்கு இருக்கும் இயற்கை வளம் ஒன்றை எடுக்க அரசியல்வாதிகள் அருள்தாஸ் – பிஎல் தேனப்பன் பகடைக்காய்களாக பயன்படுத்துகிறது.

இந்த சூழ்ச்சியில் பிரபுவும், இளவரசும் கொல்லப்படுகிறார்கள். தலைவர்கள் இருவரும் இல்லாத நிலையில், இருப்பகுதி மக்களிடையே மோதல் வெடிக்கிறது.

இந்த மோதல் எங்கு போய் முடிந்தது. இதனிடையே சாந்தனுவுக்கும், ஆனந்திக்கும் முளைத்த காதல் என்ன ஆனது? என்பதை சீமை கருவேல மர அரசியலோடு கலந்து சொன்னால் அதுதான் இராவணக்கோட்டம் திரைப்படத்தின் கதை!

 

ஊர் தலைவராக பிரபு. நடை, உடை, பாவனை என அனைத்திலும் தலைவருக்கான அக்கறையையும், அரவணைப்பையும், ஆக்ரோஷத்தையும் காட்டி சிறப்பாக கடத்தியிருக்கிறார். இளவரசு வழக்கம் போல கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கிறார்.

சாந்தனுவுக்கு இது வித்தியாசமான களம். பெரும்பான்மையான இடங்களில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எமோஷனை கடத்துவதில் சிரத்தை எடுத்து அருமையாக நடித்துள்ளார்.

அவரின் காதலியாக வரும் ‘கயல்’ ஆனந்தி கதாபாத்திரத்தில் பெரிதாக உதவி இருக்கிறார். சாந்தனுவின் நண்பனாக நடித்திருந்த சஞ்சய் சரவணன் அந்தக் கதாபாத்திரத்தை இன்னும் உணர்ந்து நடித்து இருப்பது படத்திற்கு கூடுதல் பலம். ஒரு கை ஆசாமி மாரி வில்லனாக அசததி இருக்கிறார்.

மாவட்ட ஆட்சியர் இரு காட்சி என்றாலும் கடையின் திருப்புமுனை.

சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் பிரபு, இளவரசு, தீபா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். வெற்றி வேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து இருக்கிறார்.

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லி இருக்கிறார். பாராட்டுகள்!!!

“இராவண கோட்டம்”  அனைவரும் ரசிக்கும் படி உருவாக்கப்பட்ட குடும்பத்துடன் பார்க்க கூடிய நல்ல படம்

Raavana Kottam

Cast :-

Shanthnu Bhagyaraj – Senguttuvan
‘Ilaya Thilagam’ Prabhu – Bose
Ilavarasu – Chitravel
Anandhi – Indhira
Sanjay Saravanan – Madhimaaran
Deepa Shankar – Kaliyamma
Aruldoss – MLA
Thenappan – Minister Raasakannu
Sujatha Sivakumar – Sundaravalli
Murugan – Maari
Sathya – Kattakottu

Crew :-

Producer – Kannan Ravi (Kannan Ravi Group)
Director- Vikram Sugumaran
Cinematographer – Vetrivel Mahendran
Music Director – Justin Prabhakaran
Editor – Lawrence Kishore

Lyrics -Ekadasi, Karthik Netha
Art Director – Narmadha Veni, Raju
Stills – Pavai G.D. Ramesh
Choreography – Bobby Antony
Stunts – Rock Prabhu
Pro – Suresh Chandra D’one, Sathish (AIM)
Publicity Designs – Yuvaraj Ganesan

#ravanakottammoviereview #ravanakottammovie #ravanakottamreview #review #moviereview #tamilmoviereview #fdfs #Tamil movie #movie #cinema #film #flick

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author