இருமொழிகளில் உருவாகும் திகில் படம் “தருணம்”  

இருமொழிகளில் உருவாகும் திகில் படம் “தருணம்”

 

அகஸ்தியா கிரியேஷன்ஸ் சார்பில் டெல்லி பஞ்சாப் ரெட் லைனர் நிறுவனர் வெங்கட் செல்லைய்யா தயாரிக்கும் படம் தருணம். கன்னடம் மற்றும் தமிழில் தயாராகிறது.

புதுமணதம்பதிகள் தேனிலவுக்காக பயணம் செய்கிறார்கள். அவர்கள் தங்கும் அறையில் ஒரு கருமையான உருவம இவர்களை மிரட்டுகிறது. தம்பதிகள் அங்கிருந்து தப்பித்து தங்கள் ஊருக்கு வருகின்றனர்.

ஆனால் தம்பதிகள் வருவதற்கு முன்பே அதே உருவம் வருகிறது. அதை பார்த்து மீரளும் தம்பதிகள் அங்கிருந்து தப்பித்து வேறு இடத்திற்கு செல்கின்றனர்.

அங்கும் இவர்களை மிரட்டுகிறது அந்த உருவம் எங்கு சென்றாலும் இவர்களுக்கு முன்பே அங்கு ஆஜர் ஆகும் இந்த கருப்பு உருவத்தில் இருந்து தம்பதிகள் தப்பித்தனரா என்ற பின்னணியில் உருவாகிறது தருணம்.

இதுவரை வெளியான பேய் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகியுள்ளது தருணம். மங்களூர், சிக்மகளூர், கோவை, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் தருணம் உருவாகியுள்ளது. ஒளிப்பதிவு ஹாலிவு தரத்தில் நாயகன் ராகு ரஞ்சன், நாயகி மானஷா கவுடா.

ஒளிப்பதிவு கிரன் பிட்டிங்

D.S இலட்சுமணன் பாடல்கள் லாவரதன், சுயகணணன் இசை ராக ரமணா‌,கதை திரைக்கதை வசனம் இயக்கம் கே.பி.ரகு அடர்ந்த காட்டு பகுதிகளிலும் இது வரை கேமரா பார்வையில் பதியாத இடங்களிலும் பிரமாண்டமானத்திகில் படமாக உருவாக்கப் பட்டுள்ளது தருணம்.

 

 

You May Also Like

More From Author