இறுதி பக்கம் (Last page) திரைப்பட விமர்சனம் – மதி ஒளி ராஜா
தயாரிப்பு – ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் சிலம்பரசன் | கிருபாகர் | செல்வி வெங்கடாசலம் தயாரித்துள்ளனர்.
எழுத்து – இயக்கம்.:
மனோ வெ கண்ணதாசன்
ஆரம்ப காட்சியே சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்படும் திரைப்பட உணர்வை கொடுக்கிறது. சிறிது நேரத்தில் கதாநாயகி கொலை செய்யப்பட்டது. படத்தை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது. வழக்கமான சினிமா நாயகி போல் இல்லாமல் இரு ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக பழகி இருக்கிறாள். அவள் கொலையின் மர்மம் என்ன? – என்று விசாரணை தான் படத்தின் கதை.
இயக்குநர் தன் கதை மேலும், கதாப்பாத்திர உருவாக்கத்திலும், திரைக்கதை வடிவமைத்தது, ஆழமான வசனம், தெளிவான இயக்கம் என சிறப்பாக செய்துள்ளார்.
பரிச்சயமாகாத நடிகர்கள் என்றாலும் அனைவரும் நடிப்பில் அசத்தி உள்ளார்கள். வருங்கால நட்சத்திரங்கள் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை.
பின்னணி இசை உலக தரம். பாடல் திருப்தி ரகம். ஒளிப்பதிவு சிறப்பு. படத்தொகுப்பு அற்புதம். சவுண்ட் டிசைன் கூடுதல் பலம்.
புதிய கதை, நினைத்து பார்க்காத காட்சி நகர்வுகள், நல்ல படம். போலீஸ் விசாரணை படங்களில் புதுமையான படம். நினைத்து பார்க்காத கிளைமாக்ஸ்.
புதுமுக நடிகர், புது தொழில்நுட்ப கலைஞர்களின் படைப்பு என்று நினைக்காமல் இப்படத்தை பார்த்தால் மன திருப்தியுடன் வரலாம்.
நடிகர்கள் :
ராஜேஷ் பாலச்சந்திரன் as குமார் –
அம்ருதா ஸ்ரீநிவாசன் as இயல்
விக்னேஷ் சண்முகம் as பிரசாந்த் –
கிரிஜா ஹரி as ஜெனிபர்
ஸ்ரீ ராஜ் as மிதுன் – சுபதி ராஜ் as ராமசாமி
ஒளிப்பதிவு : பிரவின் பாலு
இசை : ஜோன்ஸ் ரூபர்ட்
படத்தொகுப்பு : ராம் பாண்டியன்
ஒலி வடிவமைப்பு : ராஜேஷ் சசீந்திரன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் : சுமேஷ்
கலை : ஜெய் J திலிப்
ஒப்பனை : திவ்யா M
நிர்வாக தயாரிப்பு : மனோ வெ கண்ணதாசன்
மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்
மதி ஒளி ராஜா