உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “கலகத் தலைவன்” பட விமர்சனம் – மதிஒளி ச ராஜா
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான படம் “கலகத் தலைவன்”.
சமூக நலன் கூடிய ஓர் பழிக்குபழி வாங்கும் கதையை தன் ஆக்கப்பூர்வமான திரை கையாடலால் அழகான சினிமாவாக மாற்றிருக்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி.
மகிழ் திருமேனி இயக்கம் என்றாலே ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்து உண்டு என்பதை இப்படத்திலும் மீண்டும் நிரூபித்துள்ளார்.
திரைக்கதை ஆக்கத்தால் தன்னால் சிறப்பு செய்ய முடியும் என கலகத் தலைவன் படம் மூலமாக மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி.
வஜ்ரா என்றொரு மாபெரும் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிகிறார் உதயநிதி. வஜ்ரா நிறுவனம் புதிய கனரக வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிலையில் இவ்வாகனம் மூலம் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என தெரியவர, அந்த விஷயம் நிறுவனம் ரகசியம் வெளியே தெரியாதவாறு சதி செய்கிறது.
உதயநிதி – நிதி அகர்வாலுடன் காதல் கலந்த நட்புடன் பயணிக்கும் அவர் மேலும் ரகசியமான வேலைகளை செய்கிறார்.
இந்நிலையில் வஜ்ராவின் ரகசியங்கள் எதிரிகளுக்கு கிடைக்க இதனால் வஜ்ரா வர்த்தகம் பாதிக்கும் நிலை, வஜ்ராவின் ரகசியங்களை திருடி விற்பது யார்? என்ற தேடுதல் வேட்டையில் மோசமான வில்லன் ஆரவ் களம் இறங்குகிறார்.
ஆரவ்வின் தேடலில் உதயநிதி எப்படி கண் மறைவாக ஆகிறார்.
வஜ்ராவின் பின்கதை என்ன? என்ற கேள்விகளுக்கு திரைக்கதை பதிலளிக்கிறது.
ஐடி நிறுவன பணி ஆளாக உதயநிதி கவர்கிறார். உதயநிதியின் நடிப்பில் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது. நல்ல கதாப்பாத்திர வடிவமைப்பு ஒரு நடிகனை நல்ல நடிகனாக மாற்றிவிடும் தானே!!.
நிதி அகர்வால் நல்ல தேர்வு என்றே படம் பார்த்த அனைவரும் சொல்வார்கள். இளமை அழகு அள்ளுகிறது.
ஆரவ் பல இடங்களில் கம்பீரமாக ஆச்சர்யப்பட வைக்கிறார். கலையரசன் தனக்கு கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக நிரப்பியிருக்கிறார். இரண்டாம் நாயகனாக வலம் வருகிறார்
படத்தில் மற்றொரு ஆச்சர்யம் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையில் காட்சிகளுக்கேற்ற உணர்விசையை வழங்கிய இடத்தில் சர்வதேச தரம், அரோல் கரோலி பாடல் இசை வேற லெவல்.
அடுத்ததாக K தில்ராஜ் ஒளிப்பதிவு படத்தின் பக்கபலம். படம் காட்டும் எல்லா நிலப்பரப்பும் படம் காட்டாமல் நிஜமாக காட்டுகிறது. ஶ்ரீகாந்தின் படத்தொகுப்பு மிக அருமை. கலை இயக்குனர் பணி மிகவும் வியக்க வைக்கிறது
அரசாங்கம் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு நிறைய சலுகைகளை மற்றும் தனியார் மயமாக வழங்குவதன் பின்னணியில் இருக்கும் ஊழலை ஊதிப் பெரிதாக்காமல் உண்மை நிலையை உள்ளபடி சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
காற்று மாசு படும் பிரச்சனையையும் அரசியல் பிரச்சார நெடியின்றி பேசியிருக்கிறார்.
உதயநிதி கேரக்டருக்கான ரைட்டிங்கில் தனிக்கவனம் எடுத்திருக்கும் இயக்குநர் படத்தின் பின்பாதியிலும் சிறப்பான கவனம் எடுத்திருக்கிறார்.
அதேபோல் இப்படத்தில் ஒரு ரயில்வே ஸ்டேசன் போஷன் ஒன்றும் மறக்க முடியாது. அட்டகாசமாக உருவாக்கியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் – நிதி அகர்வால் இணை ஜோடியாக நடிக்க, ஆரவ், கலையரசன், அங்கனா ராய், அனுபமா குமார், ஜீவா ரவி, விக்னேஷ் காந்த், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
மிக சிறந்த படம், இக்கால சினிமா ரசிகர்களை கவரும் படம் கலகத்தலைவன்.
மதிஒளி ச ராஜா