உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் விமல்
இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் புதிய படம் உருவாகி கொண்டிருக்கிறது.
குடும்ப உறவுகளையும் மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பாண்டியராஜன் விமலின் தந்தையாக நடிக்கிறார்.
சகோதரியாக அனிதா சம்பத் நடிக்கிறார். தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் ஒரு அண்ணனின் வாழ்வை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள்: விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன், வத்சன் வீரமணி, ஆடுகளம் நரேன்், பாலசரவணன்், தீபாா, நேகா ஜா.
இயக்குனர் : மார்ட்டின் நிர்மல் குமார்.
திரைக்கதை : மார்ட்டின் நிர்மல் குமார் மற்றும் வத்சன் வீரமணி
ஒளிப்பதிவு : கமில் ஜே அலெக்ஸ்
இசையமைப்பாளர் : காட்வின்