“உருமல்” படத்தின் படத் துவக்க விழா கேரளாவில் இனிதே நடைபெற்றது!!!

டபுள் எஞ்சின் புரொடக்ஷன் சார்பில் ஆர். ராஜேஷ் தயாரிப்பில் கிரவுன் ராஜேஷ் இயக்கும் உருமல் படத்தின் படத்துவக்கவிழா இன்று காலை 10 மணிக்கு கேரளாவில் இனிதே நடைபெற்றது…

 

இப்படத்தில் நாயகனாக குருகாந்த்,கார்த்திக் ஶ்ரீ, ராம் ராஜேஷ் ஆகியோர் நடிக்க நாயகியாக ஷிவன்யாராணி நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜா சாகிப் , கவுன்கள் சுரேஷ், ஆனந்தா மூடர் மற்றும் ஸ்ரீதேவி அணில் ஆகியோர் நடிக்கிறார்கள்..

இப்படத்திற்கு எழுத்து இயக்கம் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு கிரவுன் ராஜேஷ், இசை கிரவுன் ஜே ஆர், சண்டை பயிற்சி புரூஸ்லி ராஜேஷ், கலை இயக்குனர் விஜயன் சேட்டையன்

 

உத்திரபிரதேசத்தில் தமிழர்கள் அவர்களின் வாழ்வுரிமைக்காக போராடும் போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளது

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ளது

ஆகஸ்ட் மாதம் உத்திரபிரதேசத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது

You May Also Like

More From Author