உலக நாயகன் கமல் ஹாசனை தன் மகன்களுடன் சந்தித்த அவரது தீவிர ரசிகரான நடிகர் ஏஎல் உதயா!

சமீபத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் விஸ்வரூப வெற்றி அடைந்தது. அந்த சந்தோஷத்தை சிறு வயதில் இருந்தே கமல் ஹாசனின் தீவிர ரசிகரான நடிகர் ஏஎல் உதயா தன் இரண்டு மகன்களுடன் ஜேஷன் உதயா (13), சச்சின் உதயா (7) உலக நாயகன் கமல் ஹாசன சந்தித்து ஆசி பெற்றார்கள். நடிகர் உதயா மட்டுமல்ல அவரது இரண்டு மகன்களும் உலக நாயகன் கமல் ஹாசனின் தீவிர ரசிகரகள்.

இளைய திலகம் பிரபு முக்கிய கதாாத்திரத்தில் நடித்து, இசை ஞானி இளைய ராஜா இசையில் உருவான “திருநெல்வேலி” திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் ஏஎல் உதயா. அதன் பின் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். இப்போதும் பல படங்கள் நடித்து கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் இவர் இயக்கி, நடித்த “செக்யூரிட்டி” (Security) குறும்படம், ஃபேமிலி (Family) குறும்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது பல விருதுகளை வென்றது.

இவரது தந்தை திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஏஎல் அழகப்பன் ஆவார். இவர் திரைப்பட தயாரிப்பாளா், நடிகர் மட்டுமின்றி திரை உலகத்தினருக்கும், தமிழக அரசுக்கும் பாலமாக விளங்கினார்.

இவரது தம்பி இயக்குனர் ஏஎல் விஜய் இன்றைய முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஆவார்.

தன் திரை உலகின் ஆசானாக தன்னை சிறு வயதில் இருந்தே இன்று வரை ஆச்சரியபடுத்தி வரும் உலக நாயகன் கமல் ஹாசனை தன் இரண்டு மகன்களுடன் சந்தித்ததில் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார் நடிகர் உதயா.

 

You May Also Like

More From Author