லைப் கோஸ் ஆன் பிக்சர்ஸ் (Life Goes On) நிறுவனம் தயாரிப்பில், அர்ஜுனன் ஏகலைவன் எழத்து – இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஊமைச் செந்நாய் “.
நடிகர்கள் : மைக்கேல் தங்கராஜ், சனம் ஷெட்டி, சாய் ராஜ்குமார், ஜெயகுமார், கஜராஜ், அருள் D சங்கர்
ஒளிப்பதிவு : கல்யாண் வெங்கட்ராமன்
படத்தொகுப்பு : அதுல் விஜய்
இசை : சிவா
சண்டைப்பயிற்சி : தினேஷ் காசி
இணைத் தயாரிப்பு : முருகானந்தம் செல்வராஜ் – வெங்கட்ராம் செல்வராஜ்
படத்தின் நாயகன் மைக்கேல் தங்கதுரை ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அமைச்சரிடம் உதவியாளராக இருந்த ஜெயக்குமாரை அவருக்கு கள்ளக்காதல் உள்ளதா என பின் தொடரும் வேலையை அவரது முதலாளி கஜராஜ் ஒப்படைக்கிறார். அந்த வேலையைச் செய்து முடிக்கும் சமயம், முதலாளி தன்னிடம் பொய் சொல்லியிருக்கிறார் என்பது தெரிந்து அந்த வேலையிலிருந்து விலகுகிறார். அதோடு ஜெயக்குமாருக்கும் போன் செய்து இந்த பின் தொடர் வேலை பற்றி சொல்லிவிடுகிறார். இதனால் ஆத்திரமடையும் கஜராஜ், அவரை உளவு வேலை பார்க்கச் சொன்னவர்கள் மைக்கேலின் காதலி சனம் ஷெட்டியைக் கடத்தி விடுகிறார்கள். காதலியின் கடத்தலுக்கு பழி வாங்கத் துடிக்கிறார் மைக்கேல்.
நாயகன் மைக்கேல் தங்கதுரைக்கும் நாயகிக்கும் இடையில் நடக்கும் காதல் காட்சிகள் இதம். ஆனால் தன்னை தேடி வரும் பெண்ணின் அன்பை புரிந்து கொள்ளாமல் ஏன் அவ்வளவு இறுக்கமாக இருக்கிறார் நாயகன் என்றுதான் புரியவில்லை.
சாய் ராஜ்குமார் வில்லனாக மிரட்டி இருக்கிறார். அருள் D சங்கர் மிக கச்சிதமா அவரது காதப்பாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார்.
டிடக்டிகவ் குழு தலைவராக கஜராஜின் தேர்வு மிகச்சரி. பெட்ரோல் பங்க் முதலாளி கதாபாத்திரம் அவரது மனைவி விஜய ஸ்ரீ மற்றும் அவர்களது மகள் பாத்திரம் என எல்லாமே கதைக்குத் தேவையாக உள்ளது.
ஒளிப்பதிவு அருமை, குறிப்பாக கன்டெய்னர் சண்டைக்காட்சி, சோளக்கதிர் விளைச்சல் நிலத்தில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி மிக மிக அருமை. இசை மெலோடி பாடல் கேட்க சுகம், பின்னணி இசை சிறப்பு.
படத்தொகுப்பு திரைக்கதைக்கு பக்கபலம். கதை, வசனம், இயக்கம் சர்வதேச படம் பார்த்த திருப்தி தருகிறது.
திரில்லர் திரைப்பட ரசிகர்களுக்கு ஊமைச் செந்நாய் படம் நல்ல விருந்து.
மதி ஒளி ராஜா