ஶ்ரீ விஷ்ணு விஷன்ஸ் சார்பாக டாக்டர் ராஜசேகர் தயாரிப்பில், நவீன் கணேஷ் இயக்கத்தில், ஶ்ரீகாந்த் – வித்யா பிரதீப் – பூஜா ஜவெரி – ஆஷிஷ் வித்யார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் “எக்கோ”.
ஶ்ரீகாந்த்திற்கு மனநிலை சார்ந்த பிரச்சனை ஏற்படுகிறது. தன் கால் வைக்கும் தரையில் இரத்தம் இருப்பதாகவும், ஏதோ சத்தம் காதில் கேட்பதும், ஜன்னல் திரை சீலை கழுத்தை நெரித்து கொலை செய்வது போல் கற்பனை செய்து கொள்கிறார்.
இதனால், தன வேலை பறிபோகிறது . இவரது மனைவி (பூஜா ஜவெரி) இவரை விட்டு வெளியே செல்கிறார்.மேலும் மன அழுத்தம் ஏற்படுகிறது.
இதனால், மனநல நிபுணர் (ஆஷிஷ் வித்யார்த்தி) உதவியை நாடுகிறார். அப்போது தான் தெரிய வருகிறது இவரது முதல் மனைவி (வித்யா பிரதீப்) இதே போல் மனநிலை பாதிப்பு அடைந்தவர் என்று அதனால் இவர் தங்கி இருந்த வீட்டில் ஏதோ அமானுஷ்ய சக்தி இருக்கிறதா என சோதித்து பார்க்க வருகிறார் ஆஷிஷ் வித்யார்த்தி.
இதன் மர்மம் என்ன? ஏன் ஶ்ரீகாந்த் இப்படி அவதி படுகிறார்? இவரை முதலில் காதலித்த இரண்டாம் மனைவி என்ன ஆனார்? முதல் மனைவி மனநிலை சரி ஆனதா? என்பதை திரையில் காண்க.
என்றும் இளமை ஶ்ரீகாந்த் ரோஜா கூட்டம் படத்தில் பார்த்தது போல இன்றும் அதே போல் இருக்கிறார் நடிப்பிலும் அசத்தி உள்ளார்.
நாயகிகள் வித்யா பிரதீப் – பூஜா ஜவெரி தங்கள் நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களைக் கவருக்கிறார்கள்.
ஆஷிஷ் வித்யார்த்தி, ஶ்ரீகாந்த் தாயாக வரும் பிரவீனா, நண்பர்களாக வரும் ஶ்ரீநாத், கும்கி அஷ்வின் சிறப்பாக நடித்துள்ளனர்.
படத்தின் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை அபாரம். ஒளிப்பதிவு & படத்தொகுப்பு சிறப்பாக அமைந்தது படத்தின் பலம்.
திரில்லர் திரைப்படம் எப்படி இருக்க வேண்டுமோ அதை இயக்குனர் சிறப்பாக வழங்கியுள்ளார். வசனம் – திரைக்கதை அருமை. இடைவேளை காட்சி யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்று. கதையில் வரும் திருப்பம் அற்புதம்.
மர்மம், திரில்லர் பட ரசிகர்களுக்கு எக்கோதிரைப்படம் நல்ல விருந்து. குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் “எக்கோ”.
ECHO Movie
Banner: Shri Vishnu Visions
Producer : Dr.Rajasekar
Co-producer: Uma Sasi
Director : Nawin Ghanesh
DOP : Gopinath
Music Director: Naren Balakumar
Editor: Sudharshan
Art: Michael
Dance Choreography: Shanthi, Radhika
Stunt Choreography: Danger Mani
Artists:
Srikanth
Asish Vidyarthi
Vidya Pradeep
Pooja Jhaveri
Kaali Venkat
Srinath
Kumki Ashwin
Delhi Ganesh
Praveena
#echomoviereview #echomovie #echoreview #echo #fdfs #movie #moviereview #review #tamilmoviereview #audience #theatre #theatrereview #audiencereview #box-office
மதிஒளி ராஜா