Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு எண்டே கிடையாது’.
படத்தின் இயக்குனர் விக்ரம் ரமேஷ் – படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
கதாநாயகியாக ஸ்வயம்சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்,
ஒரு நாள் இரவில் நடைபெறும் சம்பவம் தான் கதை இப்படத்தின் சாராம்சம். கேப் டிரைவர் சேகர் (விக்ரம் ரமேஷ்) தனது வேலை முடிந்து கிளம்பும் முன் கடைசி சவாரியாக பெண் தொழிலதிபர் ஊர்வசியை (ஸ்வயம் சித்தா) அவரது நவீன தொழில்நுட்ப நிறைந்த இல்லத்தில் இறக்கி விட செல்லும் வழியில் இருவருக்கும் நல்ல பேச்சு வார்த்தை நடக்கிறது.
இதன் விளைவாக தன்னுடன் சேர்ந்து மது அருந்த ஊர்வசி அழைக்க சம்மதிக்கும் சேகர். அவரது இல்லத்திற்குள் வர, இருவரும் மனம் விட்டு தங்களது கடந்த கால கதைகளை பேசி கொண்டு மது அருந்த, அதன்பின் சேகர் அந்த இல்லத்தில், ஒரு அசம்பாவிதம் நடந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
ஊர்வசி விளக்கம் கொடுக்கும் முன் மயக்கம் அடைந்து விழுந்து விடுகிறார். நவீன தொழில்நுட்ப இல்லத்தில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் சேகர் தோல்வியை சந்திக்கிறார். இந்நிலையில், அந்த இல்லத்திற்கு திருடுவதற்காக (கார்த்திக் வெங்கட்ராமன்) வருகிறார்.
அதன்பின் வருங்கால அமைச்சர் முன்னா பாய் (சிவக்குமார் ராஜு) ஊர்வசிக்கு நிதி உதவி செய்வதற்காக அவரும் உள்ளே வந்து ஊர்வசி உறங்கி கொண்டு இருப்பதாக நினைத்து அவர் கொண்டு வந்த மதுவை குடித்து தவறான பாஸ்வேர்டு போட்டு சில மணிநேரம் கதவு திறக்காத படி செய்து விடுகிறார்.
ஒரே இல்லத்தில், ஒரு அசம்பாவிதம், மயக்கத்தில் ஊர்வசி, வீணாக வந்து மாட்டிக்கொண்ட மூன்று நபர்கள்.
அதன்பின் என்ன? என்பதை வெள்ளி திரையில் காண்க –
படத்தின் ஆரம்பமே ரசிகர்களை சுவாரசியமாக காட்சிக்குள் இழுத்து செல்கிறது. ஸ்வயம் சித்தா – சேகர் ஆரம்பம் அற்புதமாக நகர்வதால் ரசிப்புக்கு பஞ்சமில்லை.
இளைஞர்களை வெகுவாக கவரும் விதம் இளமை ததும்பும் விஷயம், வசனம், மென்மையான ஒட்டத்துடன் கூடிய திரைக்கதை படத்துடன் இயல்பாகவே இணைத்து விடுகிறது.
கேப் டிரைவர் – திருடன் – வருங்கால அமைச்சர் மூன்று பேருக்கும் வரும் மோதல் ரசிக்க வைக்கிறது.
ஸ்வயம் சித்தா தனது இளமை கவர்ச்சி மூலம் காட்சிகள் கொஞ்சம் கூடுதல் ஈர்ப்பு கொடுத்து ரசிக்க வைத்துள்ளார்.
ஒரு இல்லத்தில் சண்டைக்காட்சி எப்படி இயல்பாக அமைக்க வேண்டுமோ அதை அற்புதமாக செய்துள்ளார் சண்டைப்பயிற்சி இயக்குனர் ஓம் பிரகாஷ்.
இசை கலாச்சரண் பாடல் புது ரகம் – பின்னணி இசை பக்கபலம்.
அந்த இல்லத்தை சிறப்பாக அமைத்து கொடுத்த கலை இயக்குனர் சூர்யாவுக்கு சபாஷ் போடலாம்.
படத்திற்கு முக்கிய பங்கு என்றால் ஒளிப்பதிவு தளபதி ரத்தினம். படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார்.
கிரைம் திரில்லரான இப்படத்திற்கு மிக முக்கியமானது படத்தொகுப்பு அதை சிறப்பாக செய்துள்ளார் முகன் வேல்.
அறிமுக இயக்குனர் மட்டுமின்றி, கதை, திரைக்கதை, வசனம், ஆடை வடிவமைப்பு, அத்துடன் முதன்மை காதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ள விக்ரம் ரமேஷ் பாராட்டுக்குரியவர்.
தமிழ் திரை உலகுக்கு திறமையான நடிகர் – தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் கிடைத்துள்ளார்.
இந்த படம் டார்க் காமெடி கலந்த கிரைம் திரில்லராகத் தான் தான் உருவாகி உள்ளது.
‘எனக்கு எண்டே கிடையாது’ திரைப்படம் நிச்சயமாக ரசிகர்களை வெகுவாக கவரும்.
#enakkuendeykidaiyathumoviereview #enakkuendeykidaiyathumovie #enakkuendeykidaiyathureview #enakkuendeykidaiyathu #fdfs #movie #review #moviereview #audience #theatre #boxoffice
மதிஒளி ராஜா