சிக்மா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ஒங்கள போடணும் சார் இளமை துள்ளலான படம். ஹரஹர மகாதேவகி இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களின் வரிசையில் இப்படமும் ஒன்று.
நண்பர்களுக்காக போலீஸ் அதிகாரிகளுக்கு வெடிகுண்டு வைப்பது, காதலிக்கு முத்தம் கொடுப்பது, டூயட் பாடுவது என வெட்டியாக ஊர் சுற்றி, அதனால் ஊர் முழுக்க ஏகப்பட்ட கடன் வாங்கி, அதை அடைக்க முடியாமல் தவிக்கும் ஜித்தன் ரமேஷ், எல்லா கடனையும் உடனே அடைத்துவிட்டு, தன் காதலி சனுஜாவுடன் எங்காவது சென்று சந்தோஷமாக வாழ நினைக்கிறார்.
ரிப்போர்ட்டர் என்ற டி.வி சேனல் நடத்தும் மனோபாலா, மக்கள் கவனத்தை தன் டி.வி பக்கமாக திருப்ப, மாறுபட்ட நிகழ்ச்சி நடத்த முடிவு செய்கிறார். சென்னை குரோம்பேட்டை அருகில் உள்ள சித்தார்த்தபுரியில் அமைந்துள்ள காட்டுக்கு நடுவில் பிரமாண்டமான பங்களாவில் பேய் இருக்கிறது என்றும், பயம் காரணமாக யாரும் அங்கு செல்வதில்லை என்றும் தெரிந்துகொள்கிறார்.
உடனே, ‘ஒரு பேய்… ஒரு கோடி’ என்று தலைப்பு சூட்டி, பங்களாவில் ஒரு வாரம் அந்த பங்களாவில் தங்கி இருந்தால், ஒரு கோடி ரூபாய் பரிசு என்று அறிவிக்கிறார். இதையறிந்த ரமேஷ் உள்பட 4 ஆண்கள் மற்றும் 4 இளம்பெண்கள், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பங்களாவில் தங்குகின்றனர். திடீரென ரமேஷ் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது. புதிய தோற்றத்துக்கு மாறுகிறார். இதையடுத்து, பங்களாவில் தங்கியிருந்த 2 பேர் மற்றும் வெளியில் இருக்கும் ஒருவர் மர்மமாக கொல்லப்படுகின்றனர்.
பங்களாவில் உண்மையிலேயே பேய் இருக்கிறதா? நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்களின் நிலை என்ன? ரமேஷ் எதற்காக அப்படி மாறினார் என்பது படத்தின் கிளைமாக்ஸ். காதலிக்கு முத்தம் கொடுப்பது, நண்பர்களுடன் அரட்டையடிப்பது என முற்பகுதியை இளமை துள்ளலாக ஜித்தன் ரமேஷ் பிற்பகுதியில் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, நன்றாக நடித்து இருக்கிறார். குறிப்பாக அந்த புதிய தோற்றத்தில் கலக்கி இருக்கிறார். ப்ளாஷ்பேக் இடம்பெறும் தங்கை பாசம் உருக வைக்கிறது. கல்லூரி வினோத், கஜேஷ் நாகேஷ், மிப்பு கோஷ்டி, படம் முழுவதும் நகைச்சுவை வழங்கிக்கொண்டே இருப்பது இனிமை மற்றும் இளமை.
ஜித்தன் ரமேஷ் நல்ல come back. ஹீரோயின் சனுஜா சோம்நாத் உள்பட்ட மற்ற 6 நாயகிகளும் புதுமுகங்கள் என்பதால், பேய் பயத்தில் அலருவது மற்றும் கவர்ச்சி மட்டுமே. சனுஜா சோம்நாத் திடீரென வில்லி ஆகிறார். செல்வகுமாரின் ஒளிப்பதிவு, பேய் பங்களாவுக்குள் பயமுறுத்த மிகவும் ஒத்துழைப்பு அளித்துள்ளது. ரெஜிமோன் இசையில் பாடல்கள் சிறப்பான ரகம். பின்னணி இசையில் சத்தம் அதிகம். இரட்டை இயக்குனர்கள் ஆர்.எல்.ரவி, ஸ்ரீஜித் இணைந்து அடல்ட் காமெடி படம் கொடுக்க நினைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். கிளை கதைகள் அதிகம் என்பதினால் திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும். நாடகத்தனமாக நகரும் காட்சிகள், முருகன் மந்திரம் பாடல்கள் வசனம் எழுதியுள்ளார் கூடுதலாகவே டபுள் மீனிங் டயலாக்குகள், அதிகமான கிளாமர் காட்சிகள் மற்றும் டபுள் மீனிங் டயலாக்குகள் இளைஞர்களைை வெகுவாக கவர்ந்தது. படத்தொகுப்பு விஷ்ணு நாராயணன் அருமையாக வேலை செய்து காட்சிகளை ரசிக்கும் படி வழங்கி உள்ளார்.
ஆக மொத்தம் உங்கள போடணும் சார் படம் இளமை படம் இளைஞர்களுக்கான படம்.