ஓடிடி தளத்தில் இளம் இயக்குநர்களுக்கு உருவாகும் வானளாவிய வாய்ப்புகள்: எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ்
தாகமெடுத்தவர்கள் தண்ணீரைத் தேடுகிறார்கள்; தண்ணீரும் தாகமெடுத்தவர்களையே தேடுகிறது” என்ற நிஜமொழிக்கேற்ப தகுதி வாய்ந்தவர்கள் நல்ல வாய்ப்பை தேடுகிறார்கள். நல்ல வாய்ப்பை தர நினைப்பவர்களும் திறமையானவர்களைதே தேடுகிறார்கள். வெப்சீரிஸ் மற்றும் ஓடிடி தளத்திற்கான திறமையான கதைகள் திரைக்கதைகள் உங்களிடம் இருந்தால் இதுவொரு சரியான வாய்ப்பு.
பிரபல முன்னணி ஓடிடி தளங்களில் மக்கள் படம் பார்ப்பதும் வெப்தொடர்கள் பார்ப்பதும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த மாற்றம் புதிய முயற்சிகளுக்கும் திறமையான நபர்களுக்கும் வாய்ப்புகளை அமைத்துத் தரும் களமாக இருக்கிறது. அப்படியான வாய்ப்புகளை வழங்கி, இணையத்தில் சிறப்பான கதையம்சம் தொழில்நுட்பம் நிறைந்த கதைகளை வெப்சீரிஸாகவும் திரைப்படமாகவும் கொண்டு வருவதற்கான ஒரு துவக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த பிரபல எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் நிறுவனம்.
வெப்சீரிஸ் மற்றும் திரைப்படங்களுக்கான மிகச்சிறந்த கதைகளோடு இருப்பவர்களுக்கு அற்புதமான களத்தை அமைத்து தர இருக்கிறது.
இந்நிறுவனம் தமிழில் பல டிவி சீரியல்களை வெற்றிகரமாக தயாரித்து வரும் நிறுவனமாகும். மேலும் கன்னடத்தில் ஒரு திரைப்படத்தையும் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. தற்போது ஓடிடி தளத்தில் தடம் பதித்து ஒரு வெப்சீரிஸை தயாரித்து முடித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக இந்நிறுவனம் நேரடியாக ஓடிடி ப்ளாட்பாரத்திற்கு தமிழ் படங்களையும், தரமான வெப்சீரிஸ்களையும் முன்னணி ஓடிடி தளங்களோடு இணைந்து தயாரிக்க இருக்கிறது. ஒரு படைப்பு மிகச்சிறந்த படைப்பாக உருவாக கன்டென்ட் மிக முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து வெப்சீரிஸ்களையும் திரைப்படங்களையும் தயாரிக்க இருக்கிறது.
இதற்காகவே கதை இலகா என்ற ஒரு பிரிவை உருவாக்கி அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. படம் இயக்கிய இயக்குநர்களில் இருந்து உதவி இயக்குநர்கள் வரை எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் நிறுவனத்தை கதை சொல்லுவதற்கு அணுகலாம். நீங்கள் சொல்லும் கதை பிடித்திருந்தால் அதற்கு அடுத்த முன்னெடுப்புகள் எல்லாமே வெளிப்படைத் தன்மையோடு நடைபெறும். கதை சொல்ல வருபர்கள் முதலில் இந்த 9840012308, 7418214608 போன் நம்பர்களுக்கு அழைக்கவும். நேரில் வர இயலாத சூழலில் இருப்பவர்கள் மெயிலில் கதை அனுப்பலாம். அதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது. மேலும் இந்நிறுவனம் வெகுவிரைவில் இயக்குநர்கள் மற்றும் புரொடக்சன் நிறுவனங்களை இணைக்கும் ஒரு மிகப்பெரிய இணையதள சேவையையும் தொடங்க இருக்கிறது.
*முக்கியக்குறிப்பு*
தகுதியான திறமை வாய்ந்த இளம் இயக்குநர்களிடம் இருந்து, ஓடிடி ப்ளாட்பாரத்திற்கு வெப்சீரிஸ் மற்றும் திரைப்படத்திற்கான சிறந்த கன்டென்டை எதிர்பார்க்கிறோம்; வரவேற்கிறோம்
முதலில் நீங்கள் போனில் தொடர்பு கொள்ளும் நபர்களிடம் உங்களைப் பற்றிய அறிமுகத்தை அனுப்ப வேண்டும். அவர்கள் அதைப்பார்த்த பின் நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் உங்களிடம் பேசுவார். இவை சரியாக நடந்த பின் உங்களுக்கு கதை சொல்வதற்கான நேரம் ஒதுக்கப்படும்.
நீங்கள் சொல்லும் கதைகள் திரைக்கதைகளுக்கான ரிசல்ட் முறையாக தெரிவிக்கப்படும். நல்ல கதைக்களுக்காகவும் இயக்குநர்களுக்காகவும் எங்கள் தயாரிப்புக் குழு காத்திருக்கிறது. இது முழுக்க முழுக்க திறமையானவர்களுக்கான வாய்ப்பு. வாய்ப்பை பயன்படுத்தி வெற்றிகாண தயாராகுங்கள்.
வெற்றிபெற வாழ்த்துகள்
அன்புடன்
estrellastories.com