கதிர் திரைப்பட விமர்சனம் – “மதிஒளி” ராஜா

நாயகன் வெங்கடேஷ் படித்த பட்டதாரி, ஆங்கில ஞானம் குறைவு என்பதால் வேலை கிடைப்பது சிக்கல் அதனால், ஊரில் நண்பர்களோடு ஜாலியாக சுற்றும் கேரக்டர். ஒரு பிரச்சனை காரணமாக சென்னைக்குச் செல்கிறார். அங்கும் அவர் நேர்முக தேர்வு தந்த தோல்வியால், மீண்டும் விரக்தியில் இருக்கிறார். அவரது வீட்டு சொந்த காரர் அறிவுரையின் படி, பெரிய நிறுவனத்தில் நேர்முக தேர்வு அங்கு அவரை ஓர் பழைய நினைவு துரத்த மீண்டும் ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் அவருக்கு ஒரு இழப்பு ஏற்பட, இனி எதிர்காலத்தை சரியாக தீர்மானிக்க முடிவெடுத்து ஒரு செயலை முன்னெடுக்கிறார். அச்செயல் வென்றதா என்பதே கதிரின் கதை!

 

வெங்கடேஷ் எதார்த்த நடிப்பால் ஈர்க்கிறார். ப்ளாஸ்பேக் போர்ஷனில் வரும் பிரதாப் சந்தோஷும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். ஏனைய கேரக்டர்களும் ஏமாற்றம் அளிக்கவில்லை. நாயகி அழகு தேவதை தமிழ் திரையுலகுக்கு நல்ல வரவு.

 

ஒளிப்பதிவு பின்னணி இசை எடிட்டிங் ஆகிய தொழில்நுட்ப டீம் சிறப்பாக செயல் பட்டிருக்கிறது.

கதிர்

 

நடிகர்கள்

 

வெங்கடேஷ்

சந்தோஷ் பிரதாப்

ரஜினி சாண்டி

பாவ்யா ட்ரிகா

 

 

தொழில்நுட்ப கலைஞர்கள்

 

தயாரிப்பு – துவாரகா ஸ்டுடியோஸ்

இயக்கம் – தினேஷ் பழனிவேல்

இசை – பிரஷாந்த் பிள்ளை

ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன்

படத்தொகுப்பு – தீபக் த்வாரகநாத்

பாடல்கள் – கார்த்திக் நேத்தா, உமா தேவி

சண்டை பயிற்சி – ஸ்டன்னர் சாம்

சவுண்ட் டிசைன் & மிக்ஸிங் – ஸின்க் சினிமா

மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

“மதிஒளி” ராஜா

You May Also Like

More From Author