“”கப்ஜா”” திரைப்பட விமர்சனம்

நடிகர் உபேந்திரா, சிவராஜ்குமார் (சிறப்பு தோற்றம்), கிச்சா சுதீப், ஷ்ரேயா சரண், முரளிசர்மா, நவாப்ஷா, ஜான்கொக்கேன், கோட்டா சீனிவாசராவ், தேவ்கில் உள்ளிட்டோர் நடிப்பில் பான் இந்திய படமாக வெளியாகி இருக்கிறது ‘கப்ஜா’ திரைப்படம்.

 

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் தொடங்குகிறது படத்தின் கதை. சுதந்திரப் போராட்ட வீரரான தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு ஆர்கேஸ்வரர் (உபேந்திரா) குடும்பம் அமரேஸ்வரம் என்ற ஊருக்கு புலம் பெயர்கிறது. விமானப்படை வீரராக தனது வாழ்வைத் தொடங்கும் ஆர்கேஸ்வரர், காலத்தின் கட்டாயத்தால் டானாக மாறுகிறார். இதனால் அவருக்கு எதிரிகள் அதிகரிக்க, அரசாங்கமும் அவரை தீர்த்துக் கட்ட நினைக்கிறது. இறுதியில் எதிரிகளையும், அரசாங்கத்தையும் ஆர்கேஸ்வரர் எப்படி எதிர்கொள்கிறார்? என்பதே கதை….

 

கதாபாத்திர தேர்வு, ஒளிப்பதிவு, ஆடை வடிவமைப்பு படத்தில் சிறப்பு.  கே.ஜி.எஃப் படத்தின் இசையமைப்பாளரான ரவி பஸ்ரூர் தான் இந்தப் படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.

உபேந்திரா, ஸ்ரேயா, கிச்சாசுதீப் உள்ளிட்ட நடிகர்களும் பிரமிக்க வைக்கும் சண்டைக்காட்சிகளும் சிறப்பாக இருக்க என்று இயக்குநர் முடிவு செய்துவிட்டார். அதனால் சண்டை காட்சிகள் சூப்பர். கலில், பகீரா என டான்களின் காட்சி எதற்கு என்றே தோன்றுகிறது.

கொடுத்த பணத்திற்கு ஆக்ஷன் கதையை தாராளமாக பார்க்கலாம்.

You May Also Like

More From Author