“கழுவேத்தி மூர்க்கன்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

அருள்நிதி நடிப்பில், ஒலிம்பியா மூவீஸ் சார்பாக அம்பேத்குமார் தயாரிப்பில், சை. கௌதம ராஜ் இயக்கத்தில் உருவான படம் “கழுவேத்தி மூர்க்கன்”.

அடிதடி சண்டை பேர்வழியான மூர்க்க சாமியும் (அருள்நிதி), கீழ் தட்டு சமூகம் சார்ந்த பொறுப்பான பூமி நாதனும் (சந்தோஷ் பிரதாப்)  இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் சிறுவயது முதலே உயிருக்கு உயிராக நண்பர்களாய் பழகி வருகின்றனர். இவர்களின் நட்பு அரசியல் தலைவர்களின் ஆதாயத்திற்கு தடையாய் நிற்க இதில் பூமி கொல்லப்படுகிறான். அந்தப்பழி மூர்க்கன் மீது விழுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பது படத்தின் மீதிக்கதை!

 

புதிய பரிமாணத்தில் புதிய உடல் மொழியுடன் வீர ஆவேசத்துடன் அனல் பறக்க மூர்க்கனாய் வரும் அருள்நிதி ஆக்சனில் மிரட்டுகிறார். இந்தப்படம் அவரது சினிமா கேரியரில் இனி ஆக்சன் படங்களை அவர் பக்கம் அதிக அளவில் இழுத்து வரும்.

பூமியாக சந்தோஷ் பிரதாப். அவரால் மிக சிறப்பாக நடிப்பை கொடுத்து அவரது உடல் மொழி அந்தக் கதாபாத்திரத்தோடு மிகவும் சிறப்பாக அமைந்தது படத்தின் பக்கபலம். கதையின் இன்னொரு நாயகன் மிகவும் மென்மையான வேடம் அசத்தியுள்ளார்.

 

இளைஞர்களை கவரும் அழகு நாயகி துஷாரா விஜயனின் இளமையுடன் கூடிய திமிரான நடிப்பு ரசிக்க வைக்கிறது.  அவரது காதலை  ஆழமாக காட்டி ரசிகர்களை மயக்குகிறார்.

சந்தோஷ் பிரதாப் ஜோடியாக வரும் இளம் கிராமத்து நாயகி சாயாதேவி காதல் காட்சியிலும், தன் காதலன் மரணத்தில் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு அனைவரையும் அசரவைத்துள்ளது.

ராஜாசிம்மன், யார் கண்ணன், முனிஸ் காந்த்,  பத்மன், சரத் லோகித்சவா, சாந்தி மற்றும் இதர நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கின்றனர்.

 

இரு சமுதாயங்களை பற்றிப் பேசும் கதை என்பதால், மிக மிக சரியாக கையாள வேண்டிய கட்டாயம்  இயக்குனருக்கு தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட ஆளுமையாக இருந்து படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குநர் கவுதம் ராஜ் அதற்காக இயக்குனருக்கு சபாஷ் போடலாம்.. சண்டைக்காட்சிகளில் அனலின் உச்சமாக இருக்கிறது படத்தின் முதுகெலும்பு சண்டைக்காட்சிகள் தான் சண்டை இயக்குனர் கணேஷ்குமாருக்கு மிகப் பெரிய பாராட்டுகள். டி இமானின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது. குறிப்பாக முதல் பகுதி முதல் பாடலும், இரண்டாம் பகுதி முதல் பாடலும் மிக சிறப்பு. ஒளிப்பதிவாளர் ஶ்ரீதருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

கமலுக்கு சகலகலா வல்லவன், ரஜினிக்கு முரட்டுக்காளை போல் அருள்நிதிக்கு “கழுவேத்தி மூர்க்கன்”.

நடிப்பில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்துள்ளனர். அருள்நிதி ஆக்சன் ஹீரோவாக அசத்தியுள்ளார்.

சிறப்பான, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம் “கழுவேத்தி மூர்க்கன்”.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-

தயாரிப்பு ஒலிம்பியா மூவிஸ்

 

தயாரிப்பாளர் அம்பேத்குமார்

இயக்கம் சை. கௌதம ராஜ்

இசை டி இமான்

ஒளிப்பதிவு ஸ்ரீதர்

படத்தொகுப்பு நாகூரான் ராமச்சந்திரன்

சண்டை பயிற்சி கே கணேஷ்குமார்

பாடல் வரிகள் யுக பாரதி வீரமணி

நடனம் தினா

நடிகர்கள் :-

அருள்நிதி  –  மூர்க்கசாமி

துஷாரா விஜயன்:  – கவிதா

சந்தோஷ் பிரதாப்: – பூமிநாதன்

சாயாதேவி – அழகு வள்ளி

முனிஸ் காந்த்: – உண்மை

சரத் லோகித்சவா: – பிரிதிவ்குமார் ips

ராஜசிம்மன்: – முனியராஜ்

யார் கண்ணன்: – முத்து வழி விட்டான்

பத்மன்: பீட்டர் – ஆண்டனி

சாந்தி – அருள்நிதியின் தாயார்

#kazhuvethimoorkanmoviereview

#KazhuvethiMoorkan #kazhuvethimoorkanmovie #kazhuvethimoorkanreview #kazhuvethimoorkan #filmreview #moviereview #review #movie #film #cinema #fdfs #audiencereview

@sy_gowthamraj @OlympiaMovis @RedGiantMovies_ @ambethkumarmla @immancomposer @officialdushara @Actorsanthosh @Sridhar_DOP @cheqba @inagseditor @sharmaseenu11 @donechannel1 @teamaimpr @thinkmusicindia

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author