கவுண்டமணி பாராட்டில், நடிகர் முத்துக்காளை!
நடிகர் முத்துகாளையை கவுண்டமணி, தாங்கள் இருவரும் இணைந்து நடித்த ‘என் உயிர் நீதானே’ படத்தின் காமெடி டைலாக்கை பேசி, ரசிச்சு, சிரிச்சு, பாராட்டினார்!
எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபு நடித்த ‘என் உயிர் நீதானே’, சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் நடித்த ‘அழகான நாட்கள்’ படத்திற்கு பிறகு 22′ ஆண்டுகள் கழித்து, சாய் ராஜகோபால் இயக்கத்தில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தில் அரசியல்வாதியான கவுண்டமணிக்கு உதவியாளராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பில், முத்துக்காளையை தன்னருகே அழைத்து, அனைவரிடமும் என் உயிர் நீதானே படத்தின் காமெடி டைலாக்கை பேசி, பதில் டையலாக்கை அவரை பேச சொல்லி, ரசிச்சு சிரித்தார். படக்குழுவினர் அனைவரும் அவரோடு சிரித்து, மகிழ்ந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து நடிகர் முத்துக்காளை கூறும் போது, கவுண்டமணி அண்ணனோடு நான் நடிக்கும் மூன்றாவது படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’. நான் வளர்ந்து வரும் நேரத்தில் இவரோடு நடித்த என் உயிர் நீதானே படத்தின் காமெடி தான் எனக்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போது லக்கி, ஷூ கீப்பர் , முனியாண்டியின் முனிப்பாய்ச்சல், பாதகன், கோட்டை முனி, தொடு விரல், அடி ஆத்தி, உதிர், கில்லி மாப்பிள்ளை, ஸ்ரீ சபரி ஐயப்பன், சாஸ்தா, அதையும் தாண்டி புனிதமானது என பல படங்களில் நடித்து வருகிறேன். கவுண்டமணி அண்ணனோடு நடித்துவரும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ எனக்கு பெரும் பேரு வாங்கி தரும் என மகிழ்ச்சியோடு தெரிவித்தார் முத்துக்காளை!