“காடப்புறா கலைக்குழு” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

சக்தி சினி புரொடக்ஷன்ஸ் சார்பாக டாக்டர் முருகானந்தம் வீரராகவன் – டாக்டர் சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், ராஜா குருசாமி எழுத்து, பாடல் & இயக்கத்தில், முனிஷ்காந்த், காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள படம் “காடப்புறா கலைக்குழு”.

முனிஷ்காந்த் காடப்புறா கலைக்குழு என்னும் கிராமிய கலையான கரகாட்ட குழுவை நடத்தி வருகிறார். இவரது குழுவில் காளி வெங்கட், டெலிபோன் ராஜ், ஸ்வேதா ரமேஷ், அந்தகுடி இளையராஜா ஆகியோர் பங்கு வகிக்கிறார்கள்.

முனிஷ்காந்தின் தம்பி ஹரி கிருஷ்ணன் தன்னுடன் கலைக் கல்லூரியில் படிக்கும் பென்சில் மீசை பெருமாள் (சூப்பர் குட் சுப்ரமணி) தங்கை ஸ்வாதி முத்துவை காதலிக்கிறார்.

இரக்க குணமும், அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்ட முனிஷ்காந்த் அந்த ஊரில் உள்ள அனைவராலும் நேசிக்கப்படுகிறார்.

இந்நிலையில், மைம் கோபிக்கு எதிராக பஞ்சாயத்தில் நிற்கும் ஆறுமுகத்தை ஆதரிக்கிறார் முனிஷ்காந்த். இதனால் என்ன நடக்கிறது? காதலர்கள் கை கூடினார்களா? திருமணமாகாத முனிஷ்காந்த் வாழ்கை? என பல வினாக்களுக்கு விடை திரையில் காண்க.

முனிஷ்காந்த் கதையின் நாயகனாக நடிப்பிலும், கரகாட்டகாரராக நடனத்திலும் அசத்தியுள்ளார். காளி வெங்கட், ஶ்ரீலேகா ராஜேந்திரன், மைம் கோபி, சூப்பர் குட் சுப்ரமணி, ஹரி கிருஷ்ணன், ஸ்வேதா ரமேஷ், ஸ்வாதி முத்து, லீ கார்த்திக் நன்றாக நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல் & இயக்கம் ராஜா குருசாமி அருமையாக அமைத்துள்ளார்.

இசை ஹென்றி தமிழ் திரை உலகுக்கு நல்ல வரவு. பாடல்கள் இனிமை. பின்னணி இசை கனகச்சிதம்.

படம் சுவாரஸ்யமாக செல்கிறது. தரமான திரைக்கதை படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளது. மனதை நெகிழ வைக்கும் காட்சிகள் அதிகம். நகைச்சுவையும் ரசிக்க வைக்கிறது.

ஶ்ரீலேகா ராஜேந்திரன் – முனிஷ்காந்த் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. காளி வெங்கட் மிக அருமையாக நடித்துள்ளார். சூப்பர் குட் சுப்ரமணி நடிப்பு அருமை.

டெலிபோன் ராஜ் ஆரம்ப காட்சியில் தன் நடிப்பின் மூலம் அனைவரையும் அசத்தியுள்ளார்.

மனதிற்கு நெருக்கமான படமாக “காடப்புறா கலைக்குழு” நிச்சயம் இருக்கும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் படம்.

 

Kadapuraa Kalaikuzhu

 

Actors

 

Munishkanth

Kaali venkat

Mime Gopi

Hari krishnan

Srilekha Rajendran

Swathi muthu

Super good Subramani

Anthakudi ilayaraja

 

Crew

 

Directed by -Raja Gurusamy

Produced by-Dr. Muruganandam Veeraragavan M. Pharm., Ph. D.

Dr. Shanmugapriya Muruganandam B. P. T., MIAP. (Sakti Ciinee Productions Pvt Ltd)

 

Lyrics-Raja Gurusamy

Music-Henry

Cinematography-Vinoth Gandhi

Editor-Ram Gopi

Art-Inba Art Prakash

Costume Designer-Dr.Shanmugapriya Muruganandam B. P. T., MIAP.

Dance-Keshav Depur

Stunt-Sharp Sankar

Sound design and Mixing- Naveen Shankar

Costumer-S. Natarajan

Production executive-J. Mani

Stills-A. S. Ashok Pandian

Publicity Designs-Sindhu Grafix

Pro-Sathish(AIM)

#kadapuraakalaikuzhumoviereview #kadapuraakalaikuzhumovie #kadapuraakalaikuzhumovie #kadapuraakalaikuzhu #moviereview #movie #review #fdfs #film #cinema #flick #audience #theatre #tamilfilm

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author