பாபுகணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், ‘கின்னஸ்’ புகழ் இயக்குனர் பாபு கணேஷ் இயக்கத்தில் ‘பிட்னஸ் ஸ்டார்’ மிஸ்டர் ஏஷியா ரிஷிகாந்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘370’
கின்னஸ் புகழ் இயக்குனர் பாபுகணேஷ் தனது சொந்த பேனரில் தயாரித்து, இயக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘370’.
உலக திரைப்பட வரலாற்றில் பல புதுமைகளை புகுத்தி, உலக சாதனைகளை தன் வசமாக்கி வரும் வித்தியாசமான இயக்குனர் பாபுகணேஷ். நடிகை, தேசிய பறவை, நானே வருவேன் படங்களை தொடர்ந்து ‘காட்டுபுறா’ திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் ‘வாசனை படம்’ படைத்த பெருமைக்குரியவர்.
இன்று பரபரப்பாக உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் விஷயம் ஆர்ட்டிகிள் ‘370’. இந்த ‘சிறப்பு அந்தஸ்து மசோதா’ குறித்து பலவிதமான சர்ச்சைக்குரிய கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இதை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த பிரம்மாண்டமான அதிரடி திரைப்படம், ஒரு புதிய கோணத்தை பிரதிபலிக்கிறது. தேசிய ஒற்றுமையும் ஒருமைப்படும் அதில் எதிரொலிக்கிறது.
இயல்பாக சுமார் நாற்பது நாட்கள் செய்ய வேண்டிய ஒருதிரைப்படத்தின் படப்பிடிப்பை, 4 கேமராக்களைக் கொண்டு நாற்பத்தியெட்டே மணி நேரத்தில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்திற்கான படப்பிடிப்பை, பல்வேறு சாதனைப் புத்தகங்களின் ஆய்வு பிரதிநிதிகளின் முன்னிலையில் நடத்தி சாதனை படைத்திருக்கிறார் இயக்குனர் பாபுகணேஷ்.
ஒரு நாளுக்கு 6 மணி நேரம் என, 8 நாட்களில் இந்த படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார் இயக்குனர். இப்படத்திலும் கதை, திரைகதை, வசனம், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, பாடல்கள், சிறப்பு ஒலி அமைப்பு, நடன அமைப்பு (ஒரு பாடலுக்கு), சண்டை பயிற்சி, நடிப்பு, பாட்டு, தயாரிப்பு மற்றும் இயக்கம் என 14 துறைகளில் அவரது பங்களிப்பு நிறைந்திருக்கிறது.
நிஜ வாழ்வில் சர்வதேச ஆணழகன் போட்டியில் வென்று பல அரிய சாதனைகளைப் படைத்திருக்கும் ரிஷிகாந்த், இப்படத்தில் கமாண்டோவாக நடிக்கிறார். முறை மிஸ்டர் தமிழ்நாடு, 2 முறை மிஸ்டர் இந்தியா, 2 முறை மிஸ்டர் ஏஷியா, 2 முறை மிஸ்டர் வர்ல்ட் நம்பர் 6 போன்ற பிட்னஸ் போட்டிகளில் வென்ற பெருமைக்குரியவர்.
அவருடன் நாயகியாக மேஹாலி இணைந்து நடிக்க, மற்றுமோரு வித்தியாசமான வேடத்தில் உலக சாதனையாளர் மூன்றாம் பாலின நாயகி நமிதா நடித்திருக்கிறார். ஜாக்குவார் தங்கம், அவரது குழுவினர் இதுவரை கண்டிராத மிகப் பிரம்மாண்ட அதிரடி காட்சிகளை இப்படத்திற்காக அமைத்துள்ளனர்.
மீண்டும் பல இந்திய மற்றும் சர்வதேச விருதுகளான கின்னஸ், லிம்கா, ஆசியா, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், யூனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்றவற்றை இலக்காகக் கொண்டு களம் இறங்கியிருக்கும் 370 அதில் அதிரடியாக வெற்றியும் பெரும் என தெரிகிறது.
நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
ரிஷி காந்த்
மேஹாலி
மூன்றாம் பாலின நாயகி நமிதா
நிஷா
பெசன்ட் நகர் ரவி
கராத்தே கோபால்
ராஜ்கமல்
வெற்றி
போகி பாபு
ரோஜா
சிவன் ஸ்ரீனிவாசா
கௌரவ வேடம்: பவர் ஸ்டார் டாக்டர். ஸ்ரீனிவாசன்
ஒளிப்பதிவு: சுவாமி
நடனம்: ரமாதேவி, அபிநயஸ்ரீ
சண்டைபயிற்சி: ஜாக்குவார் தங்கம், விஜய்
தயாரிப்பு: பாபு கணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
கதை, திரைகதை, வசனம், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, பாடல்கள், சிறப்பு ஒலி அமைப்பு, நடன அமைப்பு (ஒரு பாடலுக்கு), சண்டை பயிற்சி, நடிப்பு, பாட்டு, தயாரிப்பு மற்றும் இயக்கம் – பாபு கணேஷ்