“”கெழப்பய”” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

சீசன் சினிமா சார்பாக தயாரிப்பில் இப்படத்தின் நாயகன் கதிரேசகுமார் & இப்படத்தின் இயக்குனர் யாழ் குணசேகரன் இணைந்து தயாரித்திருக்கும் படம்  “”கெழப்பய””.

கதாநாயகன் கதிரேசகுமார், 60 முதல் 65 வயதுள்ள பெரியவர். ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

கதிரேசகுமார், வேலை முடித்துவிட்டு சைக்கிள்களில் வீட்டிற்கு வரும் போது, அந்த வழியாக கார் ஒன்று வருகிறது.

 

கிராமப்புறத்தில் உள்ள சிறிய பாதை என்பதால் ஒரு வாகனம் சென்றால் அடுத்த வாகனம் சொல்ல முடியாது முன்பு செல்பவர்கள் கொஞ்சம் ஒதுங்கி சென்றால் மட்டுமே செல்ல முடியும்.

அந்த காரில் நிறைமாத கர்ப்பிணியுடன்  சேர்த்து ஐந்து பேர் அந்த காரில் பயணித்து வருகிறார்கள்.

அந்த காரில் உள்ள ஓட்டுனர் வழிவிடும்படி தொடர்ந்து ஹார்ன் அடித்துக் கொண்டே வருகிறார்கள்.

ஆனால்,  கதிரேசகுமார் அந்த காருக்கு வழி விடாமல் நடு ரோட்டிலேயே பயணித்து கொண்டிருக்கிறார்.

 

காரில் வந்தவர்களுக்கு பொறுமை தாங்க முடியாமல் காரை விட்டு இறங்கி  கதிரேசகுமாரிடம் பிரசவத்திற்காக நாங்கள் வேகமாக செல்ல வேண்டும் தயவு செய்து கொஞ்சம் ஓரமாக செல்லுமாறு கூறுகிறார்கள்.

 

கதாநாயகன் கதிரேசகுமார், எதற்கும் செவி சாய்க்காது நடு ரோட்டிலேயே பயணித்து கொண்டிருக்கிறார்.

 

ஒரு கட்டத்தில், காரில் வந்தவர்கள் பொறுமையை இழந்து வயது வித்தியாசம் பார்க்காமல் கதிரேசகுமாரை அடிக்கத் ஆரம்பிக்கிறார்கள்.

 

அடிவாங்கிய பிறகும், கதிரேசகுமார் அந்த காரை பார்த்துக் கொண்டு மீண்டும் நடுரோட்டில் தனது சைக்கிளை நிற்க வைத்துவிட்டு அங்கேயே அமர்ந்து கொண்டு கார் செல்வதற்கு வழிவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்.

 

இந்த நிலையில், எதற்காக அந்த காருக்கு வழிவிடாமல் தடுக்கிறார்? அந்த காருக்கும்  கதிரேசகுமாருக்கும் என்ன தொடர்பு? என்பதுதான் இந்த கெழப்பய திரைப்படத்தின் மீதிக் கதை.

தெனாலி ராமன் செய்த தீர செயலின் ஒரு கதையை கருவாகக் கொண்டு உருவாக்கியுள்ளார் இயக்குனர். தன்னால் எதிர்க்க முடியாத நிலை உள்ளது என்றால், எதிர்க்க நபர்கள் சேர்க்க புத்திசாலித்தனமாக திட்டம் போட வேண்டும் என்று நமக்கு உணர்த்தும் “கெழப்பய”.

காரில் வருபவர்கள் மட்டுமின்றி படம் பார்க்கும் ரசிகரையும் எரிச்சல் வரும் அளவு பொறுமை இழக்க வைக்கும் கதிரேசகுமார் நடிப்புக்கு அனைவரும் சபாஷ் போடலாம்.

இந்தக் கெழப்பய திரைப்படத்தில் கதாநாயகனாக கதிரேசகுமார் அற்புதமாக நடித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்கு என்ன தேவையோ அதை நடிப்பின் மூலம் அளவாக கொடுத்திருக்கிறார்.

அந்த ஊர் ‘விஏஓ’ வாக வருபவரும் தனது அனுபவ நடிப்பைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அஜித்குமாரின் ஒளிப்பதிவு படம் முழுவதும்பாராட்டும் படியாக இருக்கிறது. ஒளிப்பதிவு, ஒரு சில இடங்களில் மிகவும் அசத்தியுள்ளார்.

 

இசையமைப்பாளர் கெபியின் இசையில், திரைப்படத்தின் பின்னணி இசை திரைப்படத்திற்க்கு மிகப்பெரிய பெரும் பலம்.

 

முதல் பாதியில் இருந்த ஒரு சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் இன்னும் சற்று கூடுதல் விறுவிறுப்பு. தேவையான கதாப்பாத்திரங்கள், அளவான செலவில், நடிகர்களின் உணர்வுகளை அற்புதமாக நடிப்பின் வடிவில் கொண்டு வந்து எடுக்கப்பட்ட இம்மாதிரியான சினிமாக்களை தமிழ் சினிமா ரசிகர்கள் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்கலாம்.

இயக்குனர் படம் முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆளுமை செய்துள்ளார்.

“”கெழப்பய”” படத்தை ஆதரிப்பதின் மூலம் நல்ல சினிமாவுக்கு புதிய தளத்தை உருவாக்குவது தரமான சினிமாவை ரசிக்கும் ரசிகர்கள் கடமை. இப்படி போன்ற முயற்சியை ஆதரிக்க வேண்டும்.

KEZHAPAYA:

CAST :-

– Kathiresakumar as Kezhapaya
– Krishnakumar
– Vijaya rana deeran
– KN Rajesh
– ‘Bakery’ Murugan
– Anudiya
– ‘Uriyadi’ Anandaraj as VAO

CREW: :-

Produced by Season Cinema – Yazh Gunasekaran
Director – Yazh Gunasekaran
Cinematography – Ajithkumar
Editor – KN Rajesh
Music – Kebi
PRO – Nikil Murukan

#kezhappayamoviereview #kezhappayamovie #kezhappayareview #kezhappaya #moviereview #tamilmoviereview #movie #review #fdfs #audience #theatre #audiencereview #theatrereview #fans #boxoffice #mathiolirajaa

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author