கெளஷல் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் “நான் யார்”.
தமிழ்சினிமாவில் எப்போதும் க்ரைம், த்ரில்லர் படங்களுக்கென்று ஆடியன்ஸ் ஒரு வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் ஆந்திராவை கலக்கிய ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் ” நான் யார்”.
பத்திரிகைகளில் தினந்தோறும் நடக்கும் கொலைகள் தலைப்பு செய்தியாகிறது. இதை கூர்ந்து கவனிக்கும் ஹீரோ இதைப்பற்றி ஆராய தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகியை அந்த கும்பல் கடத்தி விடுகிறது. போலீஸ் இன்வெஸ்டிகேஷன், கதாநாயகன் தேடல் என இரண்டு முனைகளில் நடக்கும் கதைக்களம் தான் “நான் யார்”.
இந்த திரைப்படத்தில் கதைநாயகனாக பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் மகன் கோலா பாலகிருஷ்ணா அறிமுகமாகிறார். சாக்ஸி சவுத்ரி கதாநாயகியாக அறிமுகமாகிறார் முக்கிய வேடத்தில் பாகுபலி பிரபாகர் வில்லனாகம், தனிஷ்க்ராஜன், கீத்ஷா, நீரஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை: ஆர்.ஜி.சக்தி
ஒளிப்பதிவு: சாமலா பாஸ்கர்
பாடல்கள்: கிருஷ்ணகாந்த்
எடிட்டிங்: கோலா பாஸ்கர்
ஸடண்ட்: ரியல் சதீஷ்
எழுத்து, இயக்கம்: நிர்ஜன் பல்நட்டி
தயாரிப்பு: பீமினேனி, சிவபிரசாத், ராம்பாபு.