“கொடை” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

எஸ் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராஜாசெல்வம் எழுத்து – இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கொடை”.

கார்த்திக் சிங்கா தன் நண்பர் ரோபோ சங்கர், சிசர் மனோகர் மற்றும் தன் தந்தையாய் பாவிக்கும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

தீயணைப்பு பாதுகாப்பு துறையில் வேலைப் பார்க்கும் அனய லட்சுமியுடன் காதல் வசப்பசப்படுகிறார். காதலை வெளிப்படுத்தும் முன் வேறு யாராவது ஒருவர் காதலை வெளிப்படுத்துவதும், மறுநாள் மீண்டும் வந்து சகோதரி என மனம் மாறுவதும் ஏன் என குழப்பம் ஏற்படுகிறது.

இன்னொரு புறம் ரோபோ சங்கர் சிங்கமுத்து, எம் எஸ் பாஸ்கர் இருவரையும் கிண்டல் செய்து வருகிறார்

வில்லன் அஜய் ரத்னம், கராத்தே ராஜா, போஸ் வெங்கட், மீசை ராஜேந்திரன் குழுவினர் கோடி கணக்கில் பணம் கடனாக தருவதாக சொல்லி முன்னதாக கமிஷன் பணம் வாங்கி ஏமாற்று வேலை செய்து வருகின்றனர். யாராவது எதிர்த்து கேட்டால் அவரகளை கொலை செய்து விடுகின்றனர்.

இந்நிலையில், அனாதை இல்லங்கள் நடத்த ஆனந்த் பாபு வில்லன் குழுவினருடன் பணம் வாங்கி கொள்ளும் படி கார்த்திக் சிங்காவிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்

வில்லன்களிடம் இருந்து அனாதை இல்லங்கள் மீட்டாரா? தான் காதலித்த பெண்ணை மணந்தாரா? கார்த்திக் சிங்கா யார்? அனாதை இல்லங்கள் யாருடையது? நாயகியிடம் காதல் வெளிப்படுத்தும் அனைவரும் மறுநாள் சகோதரி  என கூறுவது ஏன்? என படம் நகர்கிறது.

பாடல் – பின்னணி இசை மிக சிறப்பு இசையமைப்பாளர் சுபாஷ்கவி திரையுலகத்தில் நல்ல இடத்திற்கு வருவார். கொடைக்கானல் அழகை ஒளிப்பதிவாளர் அழகாக படம்பிடித்துக் காட்டுகிறார்.

வசனம், நகைச்சுவை அருமை. நகைச்சுவை நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சிரிப்புக்கு பஞ்சமில்லை.

கேஆர் விஜயா, நளினி நடிப்பு சிறப்பு. வில்லன் குழுவினர் மிரட்டுகின்றனர். சண்டைக்காட்சிகள் அற்புதம். நடனம் மிக சிறப்பு.

படத்தின் நாயகியும் அவரது தோழிகளும் அழகாக நடித்துள்ளனர். கண்களுக்கு விருந்து படைத்துள்ளனர்

ஹீரோ கார்த்திக் சிங்கா நல்ல வரவேற்பு. ஆடல், நடிப்பு, ஆக்சன், காமெடி என அனைத்திலும் சிறப்பாக செய்துள்ளார்.

இளமை, காதல், நகைச்சுவை, சண்டைக்காட்சி என பொழுதுப்போக்கு அம்சம் கொண்ட படம் “கொடை”.

ரசிகர்களை நிச்சயம் மகிழ்விக்கும் படம் “கொடை”

Actors :-

Karthick Singa, Anaya Lakshmi, Robo Shankar, M.S. Bhaskar, Marimuthu, Singamuthu, Ajay Rathnam, Bose Venkat, Lolly Sabha Swaminathan,  Ku. Gnanasambanthan,  Scissor Manohar, Crane Manohar, Anand Babu, Vincent Roy, K.R.Vijaya, Nalini, Vaishali Thaniga, Jeevitha, Karate Raja, Meesai Rajendran, Simbu Thoufiq

Technicians :-

Production Banner : SS Pictures

Director : Raajaselvam

Music Director : Subash Kavi

Dop: Arjunan Karthick

Editor: G.Sasikumar

Art: K.M.Nanthakumar

Choreography: Dinesh, Radhika

Stunts: Phoenix Prabu

Costumes: P.Rengasamy

Makeup: P.S.Kuppusamy

Stills: Mohan

Production Executive: M.Balamurugan

Publicity Design: Reddot Pawan

Co Produced by: Dr.S.Pandi Durai

PRO : Aim Team Sathish

#kodaimoviereview #kodaimovie #kodaireview #moviereview #movie #review #tamilmoviereview

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author