கோடம்பாக்கத்தை கலக்கும் திருச்சி பொண்ணு டோரத்தி ஜெய்.

கோடம்பாக்கத்தை கலக்கும் திருச்சி பொண்ணு டோரத்தி ஜெய்.

 

சினிமாவில் நாம் பார்க்கும் கலர்புல் காட்சிகளுக்கு கூலிங்கிளாஸ் போட்டது போல காஸ்ட்யூம் இருக்க வேண்டும். காஸ்ட்யூம் எந்தவொரு காட்சிக்கும் மீண்டும் மீண்டும் ஒப்பனை சேர்ப்பதே!

தமிழ்சினிமாவில் இன்று முன்னணி பேஷன் டிசைனர், பேஷன் ஸ்டைலிஸ்டாக இருப்பவர் டோரத்தி ஜெய் இவர் திருச்சியை சேர்ந்தவர். ஸ்கூலிங் எல்லாமும் முடித்துவிட்டு, மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் பிஎஸ்ஸி விஷ்வல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்தார். கல்லூரி நாட்களிலேயே இவர் இந்த துறையின் மீது கொண்ட ஈர்ப்பால் இன்று கோடம்பாக்கத்தின் முக்கிய ஐக்கானாக இருக்கிறார்.

ராகவா லாரன்ஸ், பிரபுதேவா, ஷாண்டி ஆகியோருக்கு பர்ஸசனல் பேஷன் டிசைனராகவும், பேஷன் ஸ்டைலிஸ்ட் தற்போது கைவசம் 15 படங்களுக்கு மேல் உள்ளது. சந்திரமுகி 2, பிரபுதேவாவின் உல்ப் என படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. பிரபுதேவாவுடன் ஏழு வருடங்கள் இவரது பயணம் தொடர்கிறது. நடிகைகளில் அமலபாலுடன் இவர் பணியாற்றியுள்ளார்.

இதுபற்றி டோரத்தி ஜெய் கூறும் போது எந்தவொரு ஆர்ட்டிஸ்டும் முக்கியமானவர்கள். அவர்களின் வேவ்லெண்த் தெரிந்து செயல்படுவது இந்த துறையில் முக்கியமானது. உடையில் அவர்களை நாம் தனித்து காட்டவேண்டியது மிக முக்கியமானது.

அவர்கள் நினைப்பதற்குள் நாம் செய்து முடித்திருக்க வேண்டும். இந்த பார்முலா மட்டும் தெரிந்து கொண்டால் இந்த துறை மட்டுமல்ல எந்த துறையிலும் பெண்கள் மிகப்பெரிய வெற்றியை பெறலாம் என்று கூறுகிறார் டோரத்தி ஜெய்.

You May Also Like

More From Author