தர்மராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், பாபு தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘”க் “.
நடிகர்கள் :
யோகேஷ், அனிக்கா விக்ரமன், குருசோமசுந்தரம், ஆடுகளம் நரேன், YG மகேந்திரா, சங்கர் கிருஷ்ணமூர்த்தி, மதன் பாப்
இசை : கவாஸ்கர் அவினாஷ்
ஒளிப்பதிவு : ராதா கிருஷ்ணன்
ஆரம்ப காட்சியில் இருந்தே ஒருவித எதிர்பார்ப்புடன் படம் தொடங்குகிறது. கால்பந்தாட்ட வீரர் வசந்த் சந்திரசேகர் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கிருக்கும் ஜன்னல் வழியாக அவர் ஒரு கொலையை பார்க்க நேரிடுகிறது.
முன்னதாக கால்பந்து பயிற்சியின் போது, அவரால் ஒரு புறாவும் உயிரிழக்கின்றது. வசந்த் சந்திரசேகர் பார்த்த கொலை கற்பனையானது, ஆனால் புறா உயிரிழந்தது உண்மையானது. இந்த இரண்டுக்கும் இடையிலான முடிச்சு தான் ‘க்’
கொலையை தான் பார்த்ததாக போலீஸ் ஆடுகளம் நரேன் அவர்களிடமும் மற்றும் மருத்துவர் சங்கர் கிருஷ்ணமூர்த்தியிடம் கூ றுகிறார். ஆனால் அவர்களோ அப்படி ஒரு கொலை நடக்கவில்லை என்று நிரூபிக்கிறார்கள். மேலும் யோகேஷுக்கு உளவியல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படுகிறது.
உளவியல் மருத்துவரான ஒய்.ஜி. மகேந்திரன் பாத்திரம் மூலம் மொத்த மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்கும் இடத்தில், ‘க்’ பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
முக்கோண விதி திரைக்கதை மூலம் வியப்பை ஏற்படுத்திய ‘ஜிவி’ படத்தின் கதையாசிரியர் பாபு தமிழ், ‘க்’ படத்தை இயக்கியுள்ளார். ‘ஜிவி’ படத்தின் அனுபவத்தில் இருந்து, இந்தப் படத்திற்கு மிக நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருக்கிற்றார்.
படத்தின் வேகத்தையும் சுவாரஸ்யத்தையும் அதிகப் படுத்தியது புரியாத புதிராக நகரும் திரைக்கதை தான். இரண்டாவதாக நாயகன் வசந்த் சந்திரசேகராக வரும் யோகேஷ், யதார்த்தமாக நடித்திருக்கிரார்.
இறுதியில் உளவியல் பிரச்சனையிலிருந்து யோகேஷ் மீண்டாரா? கொலைக்கும் யோகேஷுக்கு எதாவது சம்மந்தம் உண்டா? கொலை செய்தது யார் என்பதை யோகேஷ் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.
கால்பந்தாட்ட காட்சிகள் ரசிகர்களை மிரள வைக்கும். பாடல் காட்சி வெளிநாட்டில் படம்பிடிக்க விதம் பார்வைக்கு குளுமை.
நடிகர்கள் பங்கு சிறப்பாக உள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் படத்துக்கு கூடுதல் பலம்
விறுவிறுப்பாக செல்லும் படம். புதிய கதைக்களம், திரைக்கதையில் புதுமை. ரசிக்க கூடிய படம் “க்”
மதிஒளி ராஜா