“சத்ய சோதனை” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

சூப்பர் டாக்கீஸ் சார்பாக சமீர் பரத் ராம் தயாரிப்பில், சுரேஷ் சங்கையா இயக்கத்தில், பிரேம்ஜி – ஸ்வயம் சித்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் “சத்ய சோதனை”.

 

படத்தின் ஆரம்பமே நடமாடும் தங்க நகைக்கடை போல் தங்க நகை அணிந்தும் வரும் நபரை சொந்த பகை காரணமாக நான்கு பேர் அவரை கொலை செய்கிறார்கள்.

அந்த வழியே தன் வருங்கால மனைவியை பார்க்க வரும் பிரேம்ஜி அந்த சடலத்தை பார்க்க அந்த சடலத்திடம் இருந்த கடிகாரம், மொபைல் மற்றும் மெல்லிய தங்க சங்கிலியை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார்.

கொலை செய்த நான்கு பேரும், காவல் நிலையத்தில் சரணடைய கொலை செய்யப்பட்டு இறந்தவர் நிறைய நகைகள் அணிந்திருந்தது தெரிய வர, பிரேம்ஜி மீது பழி திரும்புகிறது.

இரண்டு காவல் நிலையங்கள் இந்த கோலை வழக்கில் சம்பந்தப்பட்ட நிலையில், இரு நிலைய அதிகாரிகள் அந்த தங்க ஆபரணங்கள் மீது ஆசை கொள்கின்றனர்.

இறந்து போன ஆசாமியின் உறவினர்களும் அந்த தங்க ஆபரணங்கள் மீது ஆசை கொள்கின்றனர்.

வழக்கு விசாரணை நீதிமன்றம் செல்கிறது.

கொலைக்காகவும் – நகைக்காகவும் நடக்கும் நிகழ்வுகள் தான் “சத்ய சோதனை”.

படம் முழுவதும் நகைச்சுவையே, இயல்பான நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு. அப்பாவியாக பிரேம்ஜி கதைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளார். லக்ஷ்மி பாட்டி நடிப்பு அசத்தல். குபேரன் – மகாதேவன் இரு காவல்துறை அதிகாரிகளும் சிறப்பாக நடித்துள்ளார்கள். காவல் நிலையத்தில் உதவியாளாராக வரும் ஸ்பை ராமர் நடிப்பு சூப்பர்.

கு. ஞானசம்பந்தம் நீதிபதியாக அற்புதமாக தன் கதாப்பாத்திரத்திற்க்கு உயிரளித்துள்ளார்.

நாயகி ஸ்வயம் சித்தா அழகு தேவதையாக இளம் நெஞ்சங்களை கவர்கிறார். ரேஷ்மா குறைந்த காட்சிகளே வந்தாலும் நிறைவாக செய்துள்ளார்.

பாடல்கள் குறைவு தான் என்றாலும் நன்றாக இருக்கிறது, பின்னணி இசை அற்புதம். கிராமிய இயற்கை வளங்கள் – வறட்சி – பொட்டல் காடுகளை தன் கேமராவில் அழகாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர். படத்தொகுப்பு திரைக்கதைக்கு பக்கபலம். கலை இயக்கம் நேர்த்தி.

கிராம வட்டார வழக்கு மொழி வசனம் மிக சிறப்பு. “கிடாவின் கருணை மனு” திரைப்படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டு பெற்ற இயக்குனர் சுரேஷ் சங்கையா இப்படத்திலும் நல்ல பெயர் வாங்குவார்.

“சத்ய சோதனை” கலகலப்பாக இருக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். குடும்பத்துடன் பார்க்க கூடிய படம்.

 

*Sathya Sothanai”

CAST:

Premgi Amaren – Pradheep
Swayam Siddha – Praveena
Reshma – Annam (Pradheep sister)
Chitthan Mohan – Kuberan
Selva Murugan – Mahadevan
Haritha – Mahalakshmi
Bharathi – Muppidathi
Rajendran – Spy Ramar
Ganasambantham – Judge
Muthupandi – Issaki
Karna Raja – Selvaraj (Pradheep mama)

CREW:

Produced by : Sameer Bharat Ram
Production : Super Talkies
Written & Directed by : Suresh Sangaiah
Cinematographer : R.V. Saran
Editor : Venkat Raajen
Art Director : Vasudevan
Lyrics : Velmurugan
Music : Ragu Raam. M
Background music : Deepan Chakaravarthy
Singers : Gangai Amaren, Veeramani Raju, Diwakar
Dialogues : V. Gurunathan & Suresh Sangaiah
Colorist : Ajith Vedi Baskaran
Sfx : Sathish
Mixing : Raja Nallaiah
PRO: Nikil Murukan

#sathyasothanaimoviereview #sathyasothanaimovie #sathyasothanaireview #sathyasothanaI #fdfs #moviereview #movie #review #tamilmoviereview #audience #theatre

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author