சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை – நடிகை அனுக்ரீத்தி வாஸ் !
பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்தின் மூலமாக தமிழுக்கு அறிமுகமானவர் அனுக்ரீத்தி வாஸ். மாடலிங் மூலம் சினிமாத் துறையில் நுழைந்துள்ள நடிகை.
படித்துக்கொண்டு இருக்கும் போதே மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று பட்டம் பெற்றவர். டிஎஸ்பி படத்தை தொடர்ந்து தெலுங்கில் ரவிதேஜா நடித்து சமீபத்தில் வெளியான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜெயவாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
டிஎஸ்பி படத்தில் நடித்த கதாப்பாத்திரத்தை விட இது முற்றிலும் மாறுபட்ட கடினமாகவும் சவாலாகவும் இருந்தது என்கிறார். இந்த ஜெயவாணி கதாபாத்திரம் குறித்து நல்ல பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவில் எனது பெயரும் இடம் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் இன்னும் சவாலான படங்களில் நடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.