‘சான்றிதழ்’ திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

வெற்றிவேல் சினிமாஸ் சார்பாக SJS சுந்தரம் & இப்படத்தின் இயக்குனர் ஜெயச்சந்திரன் (JVR) தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சான்றிதழ்’ .

 

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கருவறை என்ற கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி சட்டங்களை வகுத்துக் கொண்டு ஒழுக்கமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகிறார்கள். கருவறை கிராமத்தின் இத்தகைய சிறப்பை அறிந்து மத்திய அரசு சிறந்த கிராமத்திற்கான விருதை அறிவிக்க, அதை அந்த கிராம மக்கள் வாங்க மறுக்கிறார்கள். இதனால், கோபமடையும் அமைச்சர் ராதாரவி கருவறை கிராமத்தின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

அமைச்சரின் முயற்சிகளும், கிராம மக்கள் விருதை ஏற்க மறுப்பதற்கான காரணமும், ஒரு பக்கம் இருக்க, தறுதலை கிராமமாக இருந்த அந்த ஊரை கருவறை கிராமமாக மாற்றியதற்கு பின்னால் (ஹரிகுமார்) வெள்ளைச்சாமி என்பவரது மிகப்பெரிய தியாகத்தையும், அவர் தனது கனவு கிராமத்தை உருவாக்க இழந்ததையும், சொல்வது தான் ‘சான்றிதழ்’ படத்தின் கதை.

படத்தின் முதல் பகுதி, கருவறை கிராமம் மிகவும் ஒழுக்கமாக இருக்கிறது. தனிமனித கட்டுப்பாடு மிக்க கிராமம். ஜனாதிபதி விருது வாங்க செல்லாமல், தங்களது ஊருக்கே வந்து தரவேண்டும் என்று கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் தங்கள் கிராமத்தில் ஜாதி சான்றிதழ் முறை ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

படத்தின் இரண்டாம் பகுதி, அதே கிராமம் தறுதலை கிராமம் என்று அந்த ஊர் மக்கள் வாழ்க்கையும் அப்படி மிக கேவலமாக இருக்கிறது. இதை திருத்த வெள்ளைச்சாமி, அவரது நண்பர்(அருள்தாஸ்) வீரா மற்றும் முறைப்பெண் (கௌசல்யா) சங்கீதா முயற்சி செய்கிறாரகள். அதற்காக அவர்கள் தரும் விலை அதிகம். அதனால் அந்த ஊரே திருந்துகிறது.

அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசை மிக சிறப்பு. ஒளிப்பதிவு – படத்தொகுப்பு – கலை இயக்கம் மிக அருமை.

கதை ஏற்கனவே கே பாலச்சந்தர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘உன்னால் முடியும் தம்பி’ தான்.

வசனம், திரைக்கதை & இயக்கம் மிக அருமை. நகைச்சுவை, இளமை துள்ளும் காதல், வில்லத்தனம் படத்திற்கு கூடுதல் பலம்.

நல்ல சமூக அக்கறையுடன் ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள படம் ‘சான்றிதழ்’. நிச்சயம் ரசிக்கலாம். நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளனர் ரசிகர்களால் கொண்டாடப்படும் படம்.

Saandrithazh :-

CAST :-

Harikumar – Vellasami
Roshan bhashir – Pichai
Datuk. Ratha ravi – Control kanthasami
Abu khan – Durai
Ravimariya – Mannumootai
Manobala – Pollathavan
Aruldass – Veera
Kowsalya – Sangeetha
Ashika Ashokan – Sowmya
Tanisha. Kuppanda – Alli
Adithya kathir – Meen
Kajal Pasupathi – Aravalli
Uma shree – Suravalli

CREW :-

Written & Director: Jayachandran (JVR)
Cinematography: S.S.RavimaaranShivan.D.F.T
Music director: Baiju jacob
Editor: J.F.Castro
Art director: :Nanjil P. S. Robert
Stunts: Danger mani
Lyricist: JVR
Choreographers: : P. V. Noble.Dhina.I. Radhika
Sound Designer: UkI. Ayyappan(G Studios)
Sound Efx: Randy Raj
Vfx Desginer: Hocus pocus Vfx
Di: Baywood Virtual Fx
Still: M.S.Raja
Publicity Desginer: Design point
Producer by: SJS. Sundharam & JVR
Production: Vettrivel Cinemas
Audio label: Saregama
PRO: Nikil murukan

#sandrithazhmoviereview #sandrithazhmovie  #sandrithazhreview #sandrithazh #fdfs #tamilmoviereview #movie #review #moviereview #audience #theatre

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author