“சாயம்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சாயம். இந்த படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார்.

சாயம் திரைப்படம் ஜாதியை களை எடுக்கும் விவசாயம். ஜாதிகளுக்கு இடையே ஒற்றுமையை உருவாக்க நினைக்கும் ஊர் தலைமை ஆனால், தன் சுய லாபத்திற்காக ஜாதி பிரிவினையை தூண்டி விடுகிறான் காசி. அவன் சதி வலையில் சிக்கிய கதாநாயகன் தனது உயிர் தோழன் மீது ஜாதி பார்க்கிறான். இதனால் சிறைச்சாலை செல்லும் நாயகன் ஆதேஷ் பாலா ஊதும் மகுடிக்கு நாகம் போல் தன் நிலை மறந்து தீவிரவாதத்தில் இறங்கிறான்.

காசியின் தூண்டுதலினால், ஜாதி வெறி பிடித்ததால் தன் குடும்பம், காதல், நட்பு என கல்லூரி படிக்கும் மாணவ பருவத்தில் இழக்கிறான் நாயகன். ஜாதி எனும் சாயம் நம் மீது படக்கூடாது என்பதை இப்படத்தின் மூலம் இளம் சமூதாயத்திற்க்கு உணர்த்தியுள்ளார் இயக்குனர்.

படிக்கும் காலத்திலேயே மாணவர்களிடம் ஜாதி உணர்வு புகுத்தப்பட்டால் அது அவர்களது எதிர்கால வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

பிரபல நட்சத்திரங்களின் நடிப்பு இப்படத்திற்க்கு பலம் சேர்த்திருக்கிறது. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்தது படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.

படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

சாயம் திரைப்படம் இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் அவசியமான படம். ஜாதி வேற்றுமை, ஜாதி சங்கம், ஜாதி கட்சி அகற்றி நாட்டு மக்களின் ஒற்றுமையே வருங்கால தமிழகத்தை வழி நடத்தும் என்பதை புரிந்து இக்கதையை உருவாக்கியுள்ள இயக்குனரை பாராட்டலாம்.

விஜய் விஷ்வா (அபி சரவணன்) கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார்

பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, ஆதேஷ் பாலா, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.


மதிஒளி ராஜா

 

You May Also Like

More From Author