நெஞ்சுக்கு நீதி’ திரைப்பட 50வது நாள் வெற்றி விழாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட “சினிமா பத்திரிகையாளர் சங்கம்” சார்பாக நெஞ்சுக்கு நீதி படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட படக் குழுவினர் கெளரவிக்கப்பட்டார்கள்.
சிறந்த சமூக நீதி கருத்துடைய அத்திரைப்படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர் போனி கபூர், இணைத் தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, நடிகர் திரு. உதயநிதி ஸ்டாலின MLA உள்ளிட்டோருக்கு 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட “சினிமா பத்திரிகையாளர் சங்கம் ” சார்பாக அதன் தலைவர் D.R. பாலேஷ்வர், செயலாளர் .R.S.கார்த்திகேயன், பொருளாளர் A. மரிய சேவியர் ஜாஸ் பெல், செயற்குழு உறுப்பினர்கள் மதிஒளி ராஜா, .ஜாக்மென் விஜய் மற்றும் சீனியர் உறுப்பினர் . ராம்பிரசாத் பிரபு உள்ளிட்டோர் சால்வை அணிவித்து கெளரவித்தனர்.