கமர்ஷியல் மசாலா திரைப்படங்ளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் எண்ணற்ற திரைவிழாக்களில் கலந்து கொண்டு 24 சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது “சின்னஞ்சிறு கிளியே”தமிழ் திரைப்படம்,
அம்மாவின் பெருமையை உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான படங்கள் பேசியுள்ளன. ஆனால் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பிணைப்பையும் அன்பையும் மனதை உருக்கும் வகையில் திரையில் வடித்திருக்கிறது இத்திரைப்படம்.
தந்தை மகள் பாசத்தை மையமாகக் கொண்டு, ஆங்கில மருத்துவத்தின் விபரீதத்தையும் இயற்கை மருத்துவத்தின் மகத்துவத்தையும் விளக்கும் விதமாக, மிகவும் நேர்த்தியாகவும் யதார்த்தமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் விதமாகவும், மருத்துவதுறையில் புகுந்திருக்கும் வியாபார ரீதியிலான கார்பரேட் வணிகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது இத்திரைப்படம். உலக திரைவிழாக்களில் படத்தை பார்த்த விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்கள்
இத்திரைப்படத்தை செண்பா கிரியேஷன்ஸ் சார்பில் செந்தில்நாதன் தயாரித்து, நடித்துள்ளார். பல்வேறு குறும்படங்களை இயக்கி பல்வேறு விருதுகளை வென்றுள்ள சபரிநாதன் முத்துப்பாண்டியன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். கரகாட்டக்காரன் புகழ், மறைந்த நடிகர் சண்முகசுந்தரம் அவர்களின் மகன் பாலாஜி சுந்தரம் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு பாண்டியன், இசை மஸ்தான் காதர், பாடல் வரிகள் பத்மநாபன் மற்றும் கீதா படத்தொகுப்பு குமரேஷ் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்
உலக ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்த இப்படம் தமிழ் ரசிகர்களுக்காக செப்டம்பர் 24 அன்று திரையரங்கு வெளியீடாக வெளிவர இருக்கிறது.
Chinnanjiru Kiliye Stills & Details for Review
Producer : Senthilnathan S
Banner: Senbha Creations
Directed By – Sabarinathan Muthupandian
DOP – Pandiyan Kuppan
Music – Mastan-Khader
Editor – Kumaresh KD
Dialogue – Sabarinathan Muthupandian and Padmanaban G
Art – Raju
Senthilnathan as Manikkam
Baby Pathivaththini as Chittukkuruvi
Sandra Nair as Tamilselvi
Archana Singh as Archana
Balaji Shanmugasundaram as Switzerland
Kulappuli leela as Manikkam’s Grandmother
Sevviyal Kalaignar Chelladurai as Azhagarsamy
Vikramadhithyan as Manikkam’s Grandfather