சிலம்பரசன் நடிப்பில் சூப்பர்ஹிட் ஆன மன்மதன் படம் புதுப்பொலிவுடன் டிஜிட்டல் முறையில் மார்ச் 19 முதல் திரையரங்குகளில் ரிலீஸ்!

சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில் மெகா ஹிட்டடித்த ‘மன்மதன்.’ டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் வரும் மார்ச் 19-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்!

 

சிலம்பரசன் டி.ஆர். நடித்த ‘மன்மதன்.’ டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேறி மார்ச் 19-ம் தேதி மீண்டும் தியேட்டர்களில்!

 

சிலம்பரசன் டி.ஆர். கதாநாயகனாக நடித்து பெரியளவில் ஹிட்டடித்த படங்களில் ஒன்று ‘மன்மதன்.’

2004-ம் ஆண்டு வெளியான இந்த படம், இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் (Sound system 2k 4k formality) மெருகேற்றப்பட்டு, புதுப்பொலிவுடன் வரும் மார்ச் 19-ம் தேதி மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

 

படத்தை நந்தினி தேவி ஃபிலிம்ஸ் தமிழ்நாடு முழுவதும் 150 தியேட்டர்களில் வெளியிடுகிறது!

 

‘மன்மதன்’ சிலம்பரசன் டி.ஆர் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம், யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அத்தனையும் தாறுமாறான வரவேற்பு பெற்ற படம், சிலம்பரசனின் பரபரப்பான கதைக்காகவும் விறுவிறுப்பான திரைக்கதைக்காகவும் ரசிகர்களால் திரும்பத் திரும்ப பார்க்கப்பட்ட படம்.

 

சிலம்பரசன் டி.ஆர் உடன் ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, சந்தானம் என பலரும் நடித்திருந்த இந்த படத்தை ஏ.ஜே.முருகன் இயக்கியிருந்தார்.

 

மன்மதன் மீண்டும் ரிலீஸாகவிருப்பது சிலம்பரசன் டி.ஆர் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்திருக்கிறது!

You May Also Like

More From Author