AR என்டெர்டெய்ன்மென்ட், டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் – விஷால் வெங்கட் இயக்கி இருக்கும் படம் “சில நேரங்களில் சில மனிதர்கள்”.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல். அதே பெயரில் நடிகை லக்ஷ்மி, நடிகர் ஶ்ரீகாந்த் நடிக்க பெரிதும் பேசப்பட்ட படம். இதே தலைப்பில் இப்படம் உருவகியுள்ளது. தலைப்புக்கு நியாயம் செய்து இருக்கிறது இப்படம்.
அசோக் செல்வனின் தந்தை நாசர், அசோக் செல்வன் – ரியா திருமண அழைப்பிதழ் கொடுக்க இன்றே நல்லநாள் என்பதால் இன்றே கொடுக்க ஆரம்பிக்கலாம் என அசோக் செல்வனிடம் கேட்க, அதற்கு தன் தந்தை நாசரை திட்டி இன்னொரு நாள் அந்த வேலையை ஆரம்பித்து கொள்ளலாம் என மறுக்க, அசோக் செல்வன் வேலைக்கு சென்ற நேரம் பார்த்து நாசர் திருமண அழைப்பிதழ் கொடுக்க கிளம்புகிறார்.
வெளிநாட்டு இந்தியராக பிரவீன் ராஜா தன் மனைவி ரித்விகா சொந்த காரர்களிடம் வெட்டி பந்தா காட்டுகிறார். பிராண்டட் பொருட்கள் மீது மோகம்.
கே எஸ் ரவிக்குமார் – அனுபமா குமார் மகன் அபி ஹாசன் தன் தந்தை பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயவு இல்லாமல் தன் நட்பு வட்டாரத்தில் புது பட நாயகன் ஆக அறிமுகமாகி, அதன் விழாவில் தன் தந்தைக்கு முக்கியத்துவம் தர மறுக்கிறார்.
மேனேஜர் ஆவதற்கு கல்வி தகுதி இருந்தும், ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யும் மணிகண்டன், எந்த ஒரு வேலை என்றாலும் அலட்சியம். ஆனால், வெற்றி அடைய முடியுவில்லை என்ற சலிப்பு.
திருமண அழைப்பிதழ் தர அன்றைய தினம் கடைசி ஆளாக இளவரசுக்கு கொடுத்து விட்டு திரும்பி வரும் வழியில் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மரணம் அடைகிறார் நாசர்.
நாசரின் மரணம் சம்மந்தம் இல்லாத நான்கு கதைத் தளங்கள் எப்படி ஒன்றாக இணைக்கிறது என்பதே இப்படம்.
அறிமுக இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கிய அற்புதமான படம். பின்னணி இசை அருமை. ஒளிப்பதிவு சிறப்பு. கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிகர் – நடிகையர் தேர்வு மிக சிறப்பு. சலிப்பு தட்டாத திரைக்கதை. வசனம் புதுவிதம்.
நல்ல படம், புது முயற்சி அனைவரையும் கவரும். எதிர்பாராத காட்சி அமைப்புகள். ரசிகர்களை சீட்டீலேயே கட்டி போடுகிறது.
தரமான பட விரும்பிகளுக்கு அற்புதமான படைப்பு இந்த “சில நேரங்களில் சில மனிதர்கள்”
நடிகர்கள் :-
1. அசோக் செல்வன் – விஜய்
2. ரியா – மலர்
3. மணிகண்டன். K – ராஜசேகர்
4. அபி ஹாசன் – பிரதீஷ் (எ) பப்பு
5. அஞ்சு குரியன் – ரித்து
6. பிரவீன் ராஜா – பிரவீன்
7. ரித்விகா – கயல்
8. நாசர் – செல்வராஜ்
9. K.S.ரவிகுமார் – அறிவழகன்
10. இளவரசு – வரதன்
11. பானுப்ரியா
12. அனுபமா குமார்
தொழில்நுட்ப கலைஞர்கள் :-
தயாரிப்பு – AR என்டெர்டெய்ன்மென்ட், டிரைடன்ட் ஆர்ட்ஸ்
இயக்குநர் – விஷால் வெங்கட்
இசை – ரதன்
ஒளிப்பதிவு – மெய்யேந்திரன்.K
படத்தொகுப்பு – பிரசன்னா G.K
உரையாடல் – மணிகண்டன். K
கலை – A. பெலிக்ஸ் ராஜா & மனோஜ் குமார்
நடனம் – தினேஷ் (விழி பேசும்), ஸ்ரீ கிரிஷ் (உன் பிரிவு)
பாடல் வரிகள் – சினேகன் (யார் வழியில்), RJ விஜய் (விழி பேசும், உன் பிரிவு), மாதேவன் (உனக்காகவே), ராகேண்டு மௌலி & MC சேத்தன் (ஆட்டம்)
உடை வடிவமைப்பு – பிரியா ஹரி & பிரியா கரன்
ஒலி வடிவமைப்பு – சுரேன்.G, அழகியகூத்தன்
வண்ண ஓவியர் – சேது செல்வம்
VFX – அக்க்ஷா ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
விளம்பர வடிவமைப்பு – NTALKIES
புகைப்படங்கள் – ஸ்டில்ஸ் சந்துரு
மொழிக்கோர்வையாளர் – ரேக்ஸ்
மதிஒளி ராஜா