தயாரிப்பு – ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் R. ரவீந்திரன் & ஏ. ஆர் என்டேர்டைன்மெண்ட்ஸ் அஜ்மல் கான் & ரியா – ரெட் ஜெயண்ட் வழங்கும் “செம்பி”
எழுத்து மற்றும் இயக்கம்: பிரபு சாலமன்
கோவை சரளா தாய் – தந்தை இழந்த தன் பேத்தி நிலாவுடன் கொடைக்கானல் மலையில் வாழ்ந்து வருகிறார். மலையில் கிடைக்கும் தேன், காடை முட்டை, காட்டில் கிடைக்கும் பொருளைக் கொண்டு துடைப்பம் செய்து சந்தையில் விற்று தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்கின்றனர்.
இந்நிலையில், காட்டு வழியில் தனியாக செல்லும் போது அரசியல்வாதி வாரிசுகளால் சீரழிக்கப்படுகிறார் கோவை சரளாவின் பேத்தி செம்பி.
இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி பணம் மேல் ஆசை கொண்டு வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறார்.
மலைவாசி கிழவியும் – சிறுமியும் அரசியல் அதிகாரத்தில் இருக்கும் நம்மை என்ன செய்து விட முடியும் என நினைக்கும் போது அவர்களுக்கு கை கொடுக்கிறார் சட்டம் தெரிந்த அஷ்வின்குமார் லட்சுமிகாந்தன்.
பஸ் முதலாளி & கண்டக்டர் தம்பி ராமைய்யா மற்றும் பஸ்ஸில் பயணிக்கும் பயணி என படம் நகர்கிறது.
செம்பிக்கு நீதி கிடைத்ததா!? பணம் ஜெயித்ததா? அரசியல் சூழ்ச்சி என்ன? சிறுமி பாலியல் குற்றத்திற்கு என்ன பதில்? செம்பிக்கு உதவிய அனைவருக்கும் என்ன கதி? என்பதே செம்பி திரைப்படம் கதைக்களம்.
இது வரை பார்க்காத இயற்கை கொஞ்சும் இடம் பார்க்க பரவசம் அடைய வைக்கிறது ஒளிப்பதிவாளர்: எம். ஜீவன் அவர்களது ஒளிப்பதிவு.
இசை பாடல் & பின்னணி இசை படத்திற்கு முதுகெலும்பு இசையமைப்பாளர்: நிவாஸ் k. பிரசன்னா சபாஷ் போட்டு பாராட்டலாம்.
காட்சியமைப்பு, வசனம், இயக்கம் பிரபு சாலமன் அற்புதம். இன்னொரு மைனா, கும்கி, கயல் வரிசையில் செம்பி நிச்சயம் சேரும்.
கோவை சரளாவுக்கு தேசிய விருது காத்து இருக்கிறது. நடிப்பு ராட்சஸி. வீரதாய்யாகவே வாழ்ந்துள்ளார். சிறுமி நிலா சிறப்பான நடிப்பு சபாஷ் போடலாம். அஷ்வின் இப்படத்தில் மாஸ் ஹீரோ ஆகியுள்ளார்.
தம்பி ராமைய்யா நகைச்சுவை எடுபடவில்லை ஆனால் நடிப்பு அருமை.
காவல்துறை அதிகாரியாக வரும் ஆகாஷ் பலே நடிப்பு.
சிறுமியை சீர் அழிக்கும் மூன்று இளைஞர்கள் தங்கள் நடிப்பு வெளிப்பாட்டை நன்றாக செய்துள்ளனர்.
அரசியல்வாதியாக வரும் நாஞ்சில் சம்பத் & பழ. கருப்பையா மற்றும் நாஞ்சில் சம்பத் வழக்கறிஞர் தேர்ச்சியான நடிப்பு.
பஸ் பயணிகள் அனைவரும் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடித்துள்ளனர்.
உணர்வுபூர்வமான படம் செம்பி. தமிழ் திரையுலகிற்கு பெருமை செம்பி திரைப்படம்.
நடிகர்கள் :
கோவை சரளா – வீரத்தாய்,
தம்பி ராமையா – அன்பு,
அஷ்வின் குமார் லட்சுமிகாந்தன்,
நிலா – செம்பி,
நாஞ்சில் சம்பத் – எழில் வேந்தன்,
பழ கருப்பையா – அதியமான்,
ஆகாஷ் – மாசிலாமணி ,
ஞானசம்பந்தன் – ஞானசம்பந்தன்,
ஆண்ட்ரூஸ் – ஒயிட் டாக்,
பாரதி கண்ணன் – பேராசிரியர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு – ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் R. ரவீந்திரன் & ஏ. ஆர் என்டேர்டைன்மெண்ட்ஸ் அஜ்மல் கான் & ரியா
ரெட் ஜெயண்ட் வழங்கும்
எழுத்து மற்றும் இயக்கம்: பிரபு சாலமன்
ஒளிப்பதிவாளர்: எம். ஜீவன்
படத்தொகுப்பாளர்: புவன்
கலை இயக்குநர்: விஜய் தென்னரசு
இசையமைப்பாளர்: நிவாஸ் k. பிரசன்னா
நடன இயக்குநர்: ஸ்ரீ கிருஷ்
பாடலாசிரியர்கள் – எம்.கே . பாலாஜி, குட்டீ ரேவதி, பிரபு சாலமன்
ஆடை வடிவமைப்பாளர்: பிரியா கரண் – பிரியா ஹாரி
சண்டைப்பயிற்சி : பீனிக்ஸ் பிரபு
ஒலிக்கலவை – ஜீ. தரணிபதி
தயாரிப்பு நிர்வாகம் – ஹக்கிம் சுலைமான்
விளம்பர வடிவமைப்பு : ஷபீர்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
ஸ்டில்ஸ் : பி. ரிஷால் ஈஸ்வர்
ஆடைகள் : அ. கதிரவன்
ஒப்பனை : சங்கர், எம்.கே ராஜு (கோவை சரளா )
DI : ரகுராமன் (ஸ்ரீ கலாசா ஸ்டுடியோ)
VFX : டீநோட் ஸ்டுடியோ
மதிஒளி ச ராஜா
#sembi #sembimoviereview #sembimovie #kovaisarala #prabhusolomon #ashwinkumarlakshmikanthan #nivaskprassana #sembifilmreview #sembicinenareview #mathiolisrajaa #mathiolirajaa #film #cinema #movie #flick #review