பூச்சியப்பனின் மகனும், மருமகளும் ஒரு கலவரத்தில் இறந்து விட தன் பேரன் குமரேசனுடன் ஊருக்கு ஒதுக்குபுறமா கூடை பின்னி சந்தையில் விற்று வாழ்கிறார்.
இவரது கனவு தன் பேரன் உயர் அதிகாரியாக வேண்டும் என பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். இதற்காக நெடுந்தூரம் நடை பயணமாக சென்று பள்ளியில் விட்டு படிக்க வைக்கிறார்.
ஊர் பணக்காரர் பண்ணாடிக்கு பகுதி நேர வேலை ஆளாக இருக்கிறார். பண்ணாடிக்கும், அவரது பங்காளிக்கும் பொதுவான மரத்தினால் தகராறு ஏற்பட்டு பஞ்சாயத்து வரை செல்கிறது.
இந்நேரம் பண்ணாடிக்கு சேத்துமான் (பன்றி) கறி சாப்பிடும் ஆசை வருகிறது. அதற்காக என்ன என்ன முயற்சி செய்கிறார் என்பதே மீதி கதை?
எதிர் பார்க்காத க்ளைமாக்ஸ் காட்சி. மிக அருமை!!
யதார்த்தமான படைப்பு அதனால் தான் சென்ற திரைப்பட திருவிழாக்களில் எல்லாம் விருது மழை!!
நடித்த அனைவரும் புதியவர்கள் மிக சிறப்பாக நடித்துள்ளனர். பாடல்கள் 3 அனைத்தும் அருமை, பின்னணி இசை சிறப்பு.
ஒளிப்பதிவும், படத்தொகுப்பு மிகவும் சிறப்பு.
ஊர் உரையாடலை வசனமாக உண்மையாக உபயோகப்படுத்திக் கொண்டது இயக்குநரின் வெற்றி.
நிச்சயம் நல்ல படம் பார்த்த திருப்தி!
தொழில்நுட்ப கலைஞர்கள் :-
திரைக்கதை – இயக்கம் :தமிழ்
தயாரிப்பாளர் : பா. இரஞ்சித்
கதை – வசனம் : பெருமாள் முருகன்
ஒளிப்பதிவு : பிரதீப் காளிராஜா
இசை : பிந்து மாலினி
படத்தொகுப்பு : C.S. பிரேம் குமார்
ஒலி வடிவமைப்பு : அந்தோணி BJ ரூபன்
சண்டை பயிற்சி : ”ஸ்டன்னர்” சாம்
பாடல்கள் : யுகபாரதி , பெருமாள் முருகன், முத்துவேல்
கலை : ஜெய்குமார்
இணை இயக்குனர் ; சதீஸ் சவுந்தர்
துணை இயக்குனர் : யஷ்வந்த்
ஒலிக்கலவை : பிரமோத் தாமஸ்
நிர்வாகத்தயாரிப்பு : சஞ்சீவ்
கணினி வரைக்கலை : மாதவன்
DI : iGene
விளம்பர வடிவமைப்பு தமோ நாகபூசணம்
மக்கள் தொடர்பு : -குணா
தயாரிப்பு நிறுவனம் : நீலம் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் :
1. மாணிக்கம் (தாத்தா) பூச்சியப்பன்
2. மாஸ்டர். அஸ்வின் (பேரன் )
3. பிரசன்னா [ பண்ணாடி]
4. குமார் (பன்றி வளர்ப்பவர் )
5. சாவித்ரி (வெள்ளையன மனைவி)
6. சுருளி (வெள்ளையன் பங்காளி)
7. அண்ணாமலை (ஆசாரி ]
8. நாகேந்திரன் (வாத்தியார்)
மதிஒளி ராஜா