சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ரூட் – நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் இணைந்து அட்டகாசமான ‘குட்டி பட்டாஸ்’ என்கிற வீடியோவை  இன்று வெளியிட்டுள்ளனர்!

‘குட்டி பட்டாஸ்’

 

சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ரூட் – நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் இணைந்து அட்டகாசமான ‘குட்டி பட்டாஸ்’ என்கிற வீடியோவை  இன்று வெளியிட்டுள்ளனர்.

 

வண்ண மயமான, துள்ளலிசைப் பாடலான இதில் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமாரும், பிகில் புகழ் ரெபா மோனிகா ஜானும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த தனிப்பாடல் அதன் ப்ரோமோ வெளியான தருணத்திலிருந்தே இணையத்தில் பரபரப்பை உருவாக்க ஆரம்பித்துவிட்டது.

 

ஒரே நாளில் 30 லட்சம் பார்வைகளை பெற்று அந்தப் ப்ரோமோ ட்ரெண்டிங் ஆனது. சாண்டி மாஸ்டர் உருவாக்கிய, எல்லோரும் எளிதில் ஆடக்கூடிய ஒரு நடனத்தால் பல இளைஞர்கள் இந்தப் பாடலோடு சேர்ந்து நடனமாடுவார்கள் என்பது உறுதி.

 

வெங்கி இயக்கத்தில் உருவான இந்தப் பாடல், பார்ப்பவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். உடனே இணையத்தில் இந்த ‘குட்டி பட்டாஸ்’ பாடலைக் கொண்டாடி ரசியுங்கள்.

You May Also Like

More From Author