2000மணி நேர தரமான தமிழ்நிகழ்ச்சிகள்
ஐவர் – முதல் தமிழ் ஒரிஜினல்நிகழ்ச்சி தொடக்கம்
சென்னை: 2019 மே : இந்தியாவின் முதல் பிரிமியம் வீடியோ ஆன் டிமாண்ட் (VOD) தளமான சோனி லிவ் தனது நேயர்களுக்கு உள்ளூர் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கத் தமிழில் சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா,பிசினஸ் ஹெட் – டிஜிடல், உதய் சோதிஉடனிருக்கத், தமிழகத்தின் பிரபல முகங்களான கௌதம் வாசுதேவ்மேனன், பாலாஜி மோகன் மற்றும்சிங்கீதம் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் இந்த தளத்துடனான தங்களுடைய செயல்பாட்டை அறிவித்தனர். வரும் ஜூன் முதல் ஏராளமான தமிழ் நிகழ்ச்சிகள் சோனி லைவ்–இல் ஒளிபரப்பாக உள்ளன.
சோனி லைவ்–இல் ‘ஐவர்’ நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பாக இருப்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹர்ஷா இயக்கத்தில், அஸ்வின் காகாமனு மற்றும் சஞ்சனா கல்ரானி ஆகியோர் நடிப்பில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி தாத்தாவின் பத்திரிக்கையை ஒரு வர்த்தகர் மீட்டெடுக்கும் போராட்டம் பற்றியதாகும். சோனி லைவ்–இல் ஏற்கனவே 85 ஒரிஜினல்கள் உள்ள நிலையில் ‘ஐவர்’ ஜூனில் ஒளிபரப்பாகும்.
சோனி லைவ்–இல் ஒளிபரப்பாகவிருக்கும் ‘தி ஃபார்ம்’மற்றும் ‘மை மரபு’ முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்டவை.சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்கின் டாப்20 நிகழ்ச்சிகள், திரைப்படங்கள்,பிட்சர்ஸ், டிரிப்ளிங்க் மற்றும்பெர்மனெண்ட் ரூம் மேட்ஸ்உள்ளிட்ட டிவிஎஃப் ஒரிஜினல்களும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் தமிழில் வரவிருக்கின்றன.நெட்வொர்க்கின் பிரபல ஐபி–யையும் சோனி லிவ் தமிழில் மறு ஆக்கம் செய்ய உள்ளது. நீண்ட காலம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளுள் ஒன்றான க்ரைம்பேட்ரோல், உள்ளூர் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களைக் கொண்டு டிஜிடல் முறையில் மறு ஆக்கம் செய்யப்படும்.
சோனி லிவ் நூலகத்தில் தெற்குச் சந்தைகளுக்காக தி குட் டாக்டர்,கவுண்டர்பார்ட், விக்டோரியா, திஹாண்ட்மெயிட்ஸ் டேல் உள்ளிட்ட பிரபல மற்றும் விருது பெற்ற ஆங்கில நிகழ்ச்சிகள் குவிக்கப்பட்டு இருக்கின்றன. கால்பந்தாட்டப் பிரியர்கள் தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டை இனி தமிழ் வர்ணனையுடன் கண்டு மகிழலாம்.
7 நாள்களுக்கான 29 சாஷே பேக் பிரிமியம் சந்தா மாதம் ரூ 99/- மற்றும் ஆண்டு சந்தா ரூ 499/-இல் தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம். தற்போது சோனி லிவ் நூலகத்தில் இந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் சமீபமாக நேற்று அறிவித்த தெலுங்கு மொழி சேவைகள் கிடைக்கும்.
இது குறித்து சோனி பிக்சர்ஸ்நெட்வொர்க்ஸ் இந்தியா, டிஜிடல்பிசினஸ் ஹெட் உதய் சோதிகூறுகையில் ‘முன்னிலை நிறுவனம் என்னும் நிலையில் சோனி லிவ் தனது நுகர்வோருக்குப் பொழுதுபோக்கு அனுபவத்தை உள்ளூர் மொழியில் வழங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து எல்லைகளையும்,நிகழ்ச்சிகளையும், விரிவுபடுத்தியது.தமிழில் எங்கள் சேவைகளை வழங்குவதிலும், டிஜிடல் இகோசிஸ்டத்தில் எங்கள் பிராண்டை வலுப்படுத்துவதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். தடையற்ற ஸ்ட்ரீமிங்க் அனுபவத்துடன் உள்ளூர் நடிகர்கள் நடிப்பில் கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவோம்’என்றார் நம்பிக்கையுடன்.
சோனி லைவ்
அனைத்துக் கருவிகளிலும் பயனீட்டாளர்களுக் மல்டி ஸ்க்ரீன் வசதியை வழங்கும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்(எஸ்பிஎன்) நிறுவனத்தின் முதல் பிரிமியம் வீடியோ ஆன் டிமாண்ட் சோனி லிவ் ஆகும். 2013 ஜனவரியில் அறிமுகமானதைத் தொடர்ந்து அதில் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவின் 23 ஆண்டு கால நெட்வொர்க் சேனல்களின் உயரிய நிகழ்ச்சிகள பயனீட்டாளர்கள் கண்டு ரசிக்கலாம். திரைப்படங்கள்,விளையாட்டுகள், இசை, உணவு, ஃபிட்நெஸ் எனப் பல்வகை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
இதுவரை 109 மில்லியன் செயலிகள் பதிவிறக்கங்களுடன், சோனி லிவ் தனது போட்டி நிறுவனங்களிடையே ஒரிஜினல் பிரத்யேக பிரிமியம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் முன்னிலை வகிக்கிறது. ஆன்லைன் தளத்துக்காக இந்தியாவின் முதல் பிரத்யேக ஒரிஜினல் காட்சியை சோனி லிவ் அறிமுகப்படுத்தியது. 2018எஃப்ஐஎஃப்ஏ ரஷிய உலகக் கோப்பைப் போட்டிகளை சோனி லைவ்–இல் ஒளிபரப்பிய போது கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு இடையே அதுவே அதிகம் விரும்ப்பட்டதாக விளங்கியது. 2018இல் தென் ஆப்பிரிக்கா,இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்தியக் குழு விளையாடிய போது அவற்றை லிவ் ஸ்ட்ரீமிங்காக சோனி லிவ் ஒளிபரப்பியது. யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக்,யுஇஎஃப்ஏ ஐரோப்பா லீக், லா லிகா உள்ளிட்ட பல பெரிய கால்பந்து லீக்களுக்கு இதுவே சொந்த ஒளிபரப்பு தளமாகும்.
ட்ரிப்ளிங்க் சீசன் 1 மற்றும் 2 உள்ளிட்ட டிவிஎஃப் நிகழ்ச்சிகளும் சோனி லைவ்–இல் உண்டு. அமெரிக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் முன்னிலை வகிக்கும் லயன்ஸ்கேட் பிளே பிரபல ஷோக்களும், தி குட் டாக்டர், மிஸ்டர் மெர்சிடிஸ், டேமேஜஸ்,கவுண்டர்பார்ட் மற்றும் ஹேண்ட்மெயிட்ஸ் டேல் ஆகிய ஆங்கில விருது பெற்ற நிகழ்ச்சிகளும் சோனி லைவ்–இல் இதில் அங்கம் பெறும். மேலும் விவரங்களுக்குwww.sonyliv.com