ஜெயிலர் வெற்றியால் குஷியில் பதம் குமார்!!!

ஜெயிலர் வெற்றியால் குஷியில் பதம் குமார்!

 

ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பதம் குமார். இந்தியில் பல படங்களை இயக்கியுள்ள இவர் போடா போடி படத்தை தயாரித்தும் உள்ளார்.

இவர் பாவக் கதைகள் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் இவரது வில்லத்தனம் பேசப்பட்டது.

அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டினார். தற்போது ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிக்கப்பட்டது.

இதன் மூலம் இவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

இதற்கு ரஜினி மற்றும் நெல்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக வெள்ளித்திரையில் நடித்துள்ள தனது முதல் படமே ரஜினி படமாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள இவர் அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

You May Also Like

More From Author