” டு லெட் ” தமிழ் சினிமாவிற்கான கௌரவம். யதார்த்த சினிமா, ஒரு வரி கதை, காட்சிகளின் கோர்வையில் பார்வையாளர்களை கட்டி போட்டு விட்டது.
சினிமா கலைஞர்கள் வாடகை வீடு கிடைக்க எப்படி எல்லாம் சிரம படுகிறார்கள் என்பதை அப்பட்டமாய் கூறியிருக்கும் படமே டு லெட்.
இளங்கோ சினிமா இணை இயக்குனர், மனைவி அமுதா மற்றும் மகன் பள்ளி மாணவன் சித்தார்த் என சிறிய குடும்பம் ஆனால் கும்மாளம் அதிகம். வீட்டின் சொந்த கார பெண்மணியின் திடீர் கட்டளையின் பேரில் வீட்டை காலி செய்யும் சூழ்நிலை.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை வீடு தேடும் படலம். சினிமா கலைஞர் என்றால் வீடு தர மறுக்கும் சமூகம். ஒரு மாத கெடுவில் புது வீடு தேட வேண்டிய இக்கட்டான நிலை, காட்சி செல்ல செல்ல கதை சூடு பிடிக்கிறது.
படம் முடியும் போது கனத்த இதயத்தோடு தான் நிச்சயமாக செல்ல முடியும். கலந்து கொண்ட திரைப்பட விழாக்களில் அத்தனை விருதுகளை வாரி குவித்த திரைப்படம் என்றால் சாதாரணம் அல்ல. நடித்த அத்தனை நடிகர்களும் கதாபாத்திரமாவே வாழ்ந்திருந்தனர். தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தின் முதுகெலும்பு.
இயக்குனர் மற்றும் ஒளிபதிவாளர் செழியன் நல்ல திறமைசாலி. உண்மையில் திரைத்துறையினர் வாடகை வீட்டிற்காக படும் அவஸ்தையை அப்படி உள் வாங்கி காட்சிகளாக வடிவமைத்திருக்கிறார். தயாரிப்பாளர் பிரேமாவை தரமான படத்தை துணிச்சலாக தயாரித்தற்காக நிச்சயமாக பாராட்ட பட வேண்டும்.
தமிழ் திரைப்படங்களுக்கான திரையிடல் நேரம் என பார்க்கும் போது இப்பபடத்தின் நீளம் சற்று குறைவு. முடிவு சொல்லாமல் அவரவர் விருப்பத்திற்கேற்பவிட்டது இயக்குனர் கணிப்பு சற்றே நெருட வைக்கிறது. காட்சிகள் ஆரம்பிக்கும் போதே எல்லோருக்கும் முடிவு தெரிந்து விடுவதால் சுவாரஸ்யம் குறைவு.
திரையிட்ட திரைப்பட விழாக்களில் விருதுகள் குவிப்பது என்பது தேர்வாளர்கள் கையில், ஆனால் திரையரங்கில் பணம் கொடுத்து படம் பார்க்கும் ரசிகர் திருப்தி படுத்துமா என்றால் நிச்சயம் கிடையாது. தரமான சினிமா விரும்பிகளுக்கு நல்ல படம். ஜனரஞ்சக திரைப்பட விரும்பிகளுக்கு இப்படம் செல்லுபடி ஆகாது.