“டைனோசர்ஸ்” திரைப்பட விமர்சனம் – மதிஒளி ராஜா

நாயகன் மண்ணுவை சுற்றி வன்முறை, அடிதடி, வெட்டு குத்து, இரத்தம் என தினமும் போர்களம் போல நடக்கிறது. கூலிக்கு கொலை செய்யும் கூட்டம். காக்கா நகர் வாசிகள் சாலையார் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.

ஊருக்கு நல்லவன் போல் காட்சி தரும் சாலையார், வளரும் இளைஞர்களை தூண்டி விட்டு பின்னணியில் இருக்கிறார்.

மண்ணுவின் தந்தையும் இவனால் கொலை செய்யப்படுகிறார். இது தெரியாமல் இவனது அண்ணன் தனா மற்றும் அண்ணனின் நண்பன் துரை சாலையார் சூழ்ச்சியில் சிக்கிக் கொள்கிறார்கள்.

வன்முறை வேண்டாம் என்று சொல்கிற படம். வட சென்னை தாதாக்களை எதிர்த்து அகிம்சை வழியில் போராடும் ஹீரோ மண்ணு, எப்படி அதில் ஜெயிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

ஒவ்வொரு கதாபாத்திரமும் கனமாக வடிவமைக்க பட்டுள்ளது. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். வட சென்னை நம் கண் முன் தத்ரூபமாக கொண்டு வந்ததில் இயக்குனர் வெற்றி பெற்று இருக்கிறார்.

படத்தின் முக்கிய அம்சம் இப்படத்தின் வசனம் தான். படத்தை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது. நீளமான காட்சிகள் அதை திகட்டாமல் ரசிக்க வைத்தது அதற்காக இயக்குனரும், நடிகர்களும் மிகவும் சிரமப்பட்டது வீண் போகவில்லை. இதற்காக அனைவரையும் பாராட்டலாம்.

காதல் காட்சிகள் இளைஞர்கள் ரசிக்கும் படி இருக்கிறது.

பாடல்கள் அசத்தல். பின்னணி இசை அபாரம். சென்னையின் ஒரு பகுதியை தன் கேமராவின் மூலம் யதார்த்தமாக படம் பிடித்த ஒளிப்பதிவாளர் சபாஷ்க்கு ஊரியவர்.

படத்தொகுப்பு படத்தின் முதுகெலும்பு. கலை இயக்கம் சிறப்பு.

இத்தனை நட்சத்திரங்களையும் அழகாக கையாள்கிறது இயக்குனரின் திறமையை காட்டுகிறது.

ரசிகர்களுக்கு ரசிக்க தகுந்த சிறந்த படம் “டைனோசர்ஸ்”. பல விருதுகள் கிடைக்க நிறைய வாய்ப்பு உள்ளது. திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்படும் படம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

“Die No Sirs”  “டைனோசர்ஸ்”

 

Actors

 

Udhay Karthik as Mannu

Rishi as Dhana

Maara as Dhurai

Sai Priya dheva as Deepa

Maneksha as Saalaiyar

Janaki as China Kuzhandai

Arun as Thulukkanam

 

Technicians

 

Director – M R Madhavan

Produced by Srinivas Sambandam (Galaxy Pictures)

Tamilnadu Theatrical Release By Romeo Pictures

Music – Bobo Sasii DOP – Jones V Anand

Editor – R Kalaivanan

Stunt – ‘Stunner’ Sam

Lyrics – M R Madhavan

Art Director – R Valampurinathan

Sound Design – AM Senthamizhan / S Sathishkumar

Mix – AM Rahmathulla (AH Studio)

Make-Up – D Dhasarathan (Dass)

Co-Director – Maran K Vasan

Co-Cameraman – M NandhaKumar

Co-Editor – RGS Ragul

Choreography – Dastha

Production Executive – Sanjay Krishnan

Executive Producer – Gokul Ram

Costume Designer – Radhika Siva

Costumes – Cuddalore M. Ramesh

Stills – Theni Seenu / Sudhagar

Promotion Stills – D Maneksha

Sound Design Studio – Creative Pumbaa Studio

Dubbing – AVK Studios

Vfx – Raymax Studio

DI – Accel Media

PRO – Sathish (AIM)

Publicity Designs – Thandora

#dinosaursmoviereview #dinosaursmovie #dinosaursreview #dinosaurs #fdfs #tamilmoviereview #audience #theatre

"Mathioli" RAJAA

மதிஒளி ராஜா

You May Also Like

More From Author