டோனி சினிமேக்ஸ் தயாரிப்பில் “பார்டர்”
அருண்விஜய் நடிக்கும் பார்டர் படத்திற்கு முன்பே தணிக்கை செய்யப்பட்ட படம் டோனி சினிமாஸின் “பார்டர்” பலகட்ட டைட்டில் பிரச்சினைகளை முடித்து வருகிற 12 ஆம் தேதி வெளியாகிறது பார்டர் திரைப்படம்.
தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள ஓசூர், அத்திப்பள்ளி இடையில் பார்டரில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் இது.
தலையை கர்நாடகவிலும், முண்டத்தை தமிழகத்திலும் போட்டு போலீஸை திசை திருப்பும் கேங்ஸ்டர் திரைப்படம் பார்டர். காலம் காலமாக நடக்கும் காவிரி பிரச்சினையை திசை திருப்ப இப்படியான சம்பவங்கள் நடப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.
ஆனால் உண்மையில் தலைவிரித்தாடும் கூலிப்படைகளின் கோரமுகத்தை விவரிக்கிறது படம்.
ஆதரவற்றவர்கள் நல்லவர்கள் கைகளில் கிடைத்தால் பூவோடு நாறும் மணக்கும் என்பது போல அவர்கள் வாழ்வில் ஒளியேறும், அவர்கள் தீயவர்கள் கைகளில் சிக்கினால் வாழ்க்கையே இருட்டு பக்கமாகிவிடும். காட்சிக்கு காட்சி திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
பிரபல பேஷன் டிசைனரும், லேண்ட் டெவலப்பருமான ஒசூர் தேன்கனிக் கோட்டையை சேர்த்த டோனி கதை நாயகனாக நடித்து இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இவர் ரூல் நெம்பர் 4, பேராண்டி, கன்னட திரைப்படமான “கடி” படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருடன் 5 படங்களில் நாயகியாக நடித்துள்ள தரணி , ரஞ்சிதா, சாய்தினா, பில்லி முரளி, கன்னட நடிகர் அவினாஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு: செல்வகுமார் சங்கரலிங்கம்
இசை: அலென் விஜய்
எடிட்டிங்: அதுல் விஜய்
ஸ்டண்ட்: ராக்கெட் விக்ரம்.
இயக்கம்
வெங்கடேஷ் , மல்லு அர்ஜூன்
மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள “பார்டர்” திரைப்படத்தை ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறார்.