தமிழக அரசு சார்பாக நடிகர் வாசுதேவனுக்கு கலைஞர் என்ற விருதும் சபரி நாடகக் குழுவிற்க்கு 2020 ஆம் ஆண்டின் சிறந்த தன்னனார்வ கலை நிறுவனம் சுழற் கேடயம் விருதுகள் வழங்கப்பட்டது!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக கலைமாமணி விருது வழங்கும் விழாவில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குண்ணத்தூர் கிரமாத்தை சேர்ந்த நாடக நடிகர் வாசுதேவன் அவர்கள் தொடர்ந்து அரசு விழாக்களிலும் அரசு விழிப்புணர்வு நாடகங்களிலும் கோரோனா காலத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வீதியில் நாடகம் நடத்தியும் மிகவும் ஏழ்மையான நாடக கலைஞர்களுக்கு அரசு மூலம் நிதி மற்றும் அரிசி பருப்பு என மளிகைப் பொருட்களை மற்றும் பணம் வாங்கி தந்தமைக்கும் பல நாடகங்களும் ஹெல்மெட் விழிப்புணர்வு நாடகமும் இந்திய அரசின் இசை நாடக பிரிவில் நாடக நடிகராக இருப்பதாலும் இவருக்கு தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் மற்றும் துணை முதலமைச்சர் மாண்புமிகு ஓ. பன்னீர் செல்வம் அவர்கள், தொல்லியல் துறை அமைச்சர் திரு. மாஃபா பாண்டியராஜன்,  திரு செல்லூர் ராஜு அமைச்சர் மற்றும் தமிழகத்தில் உள்ள மூத்த கலைஞர்கள் திரைப்படத்துறையினர் நடிகர்கள் மற்றும் இயக்குனர் மற்றும் நடிகர் திரு. மனோபாலா சார் ஆகியோர் முன்னிலையில் வாசுதேவனுக்கு கலைஞர் என்ற விருதும் சபரி நாடகக் குழுவிற்க்கு 2020 ஆம் ஆண்டின் சிறந்த தன்னனார்வ கலை நிறுவனம் சுழற் கேடயம் விருதுகள் வழங்கப்பட்டது.

You May Also Like

More From Author