லக்ஷ்மி கிரியேஷன் சார்பாக இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு – இயக்கத்தில், சேரன், லால், வேல ராமமூர்த்தி, அருள்தாஸ், எஸ்ஏ சந்திரசேகரன், சுரேஷ் காமாட்சி, ரவி மரியா, துர்வா, தீப்ஷிகா & ஶ்ரீபிரியங்கா நடிப்பில் உருவாகியுள்ள படம் “தமிழ்க்குடிமகன்”.
சாதியை மையமாக கொண்டு இருக்கும் பட வரிசையில் இதுவும் ஒன்று, ஆனால் எடுத்திருக்கும் மய்ய புள்ளி திரையுலகத்தில் புதிய களம்.
சேரன் தன் குலத்தொழிலாகக் கொண்ட துணி வெளுத்து கொடுப்பதும், அந்த ஊரில் யாராவது இறந்து விட்டால் இறுதி சடங்கு செய்வதும் என தனக்கு விருப்பமின்றி வலுக்கட்டாயமாக செய்து வருகிறார்.
தான் படித்து கிராம நிர்வாக அதிகாரி ஆக வேண்டும். ஊரே தங்கள் குடும்பத்திற்கு மரியாதை தர வேண்டும் என குறிக்கோளுடன் தன் தங்கை தீப்ஷிகாவை மருத்துவ படிப்பு படிக்க வைக்கிறார்.
மருத்துவ படிப்பு படிக்கும் தீப்ஷிகா மேல்சாதி சேர்ந்த லால் அவர்களின் மகன் துருவ்வை காதலிக்கிறார். இந்த காதல் துருவ்வின் மாமா அருள்தாஸ் தெரியவர, நடுத்தெருவில் தீப்ஷிகாவை நாயை அடிப்பது போல் அடிக்கிறார்கள்.
தன் தங்கைக்கு இப்படி ஆகிவிட்டது என வருத்தம் – கோபம் அடைகிறார் சேரன். இதனால், இனி துணி வெளுத்து கொடுக்கும் வேலையையும் – இறுதி சடங்கு செய்வதும் முழுவதுமாக செய்ய மாட்டேன் என தன் குலச்சாமி மேல் சத்தியம் செய்கிறார்.
இந்த நிலையில், உயர்சாதி லால் அவரின் தந்தை மு. ராமசாமி இறந்து போகிறார். அவருக்கு இறுதி சடங்கு செய்ய ஊரில் இந்த தொழில் செய்யும் ஒரே ஆள் சேரன் மட்டுமே. அதனால், சேரன் வேலை அவர்களுக்கு நிச்சயம் தேவை என்னும் நிலை.
இப்படி கதை தடம் மாறாமல் ரசிகர்களை அழைத்து செல்கிறது. ஒட்டு மொத்த மேல் சாதிவர்கமா இல்லை, சேரன் என்ற ஒற்றை மனிதனின் தன்மானமா எது வெல்கிறது? என்பதே படத்தின் கதை.
சின்னசாமியாக சேரன் தனது அபார நடிப்பால் கதையை தூக்கி நிறுத்துகிறார்.
சேரனுக்கு துணையாக இருக்கும் மேல்சாதி சேர்ந்த வேல ராமமூர்த்தி தனது கம்பீர உருவம், நடிப்பு என சிறப்பு செய்து இருக்கிறார். சண்டைகாட்சியில் கலக்கி இருக்கிறார்.
அருள்தாஸ் சாதிவெறியும், மேல் சமூகத்தின் முறுக்கும் தன் நடிப்பில் வெளிப்படுத்தி அற்புதமாக நடித்துள்ளார்.
லால் மேல்சாதி பெரியவர் கதாபாத்திரத்திற்கு என அளவு எடுத்து உருவாக்கியது போல் கட்சிதமாக பொருத்தமாக இருக்கிறார். தன் தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய முடியவில்லை என்று அவர் வருத்தப்படும் போது பார்ப்பவர்களுக்கு நிச்சயம் கண்கள் கலங்கும்.
சுரேஷ் காமாட்சி காவல்துறை அதிகாரியாக படத்தின் முக்கிய காட்சியில் வந்து கதையின் போக்கை மேலும் வேறுதளத்திற்கு அழைத்து செல்கிறார்.
எஸ்ஏ சந்திரசேகரன் அவர்களது நீதிமன்ற வழக்காடுதல் படத்தில் மிகப்பெரிய பக்கபலம். அபாரமாக நடித்துள்ளார்.
ரவி மரியா இப்படத்தின் மூலம் சிறப்பாக பேசபடுவார்.
சேரன் அம்மா கதாப்பாத்திரம் அனைவரது பாராட்டுகளையும் நிச்சயம் பெறும்.
நாயகியென வரும் ஶ்ரீபிரியங்கா சேரன் கதாபாத்திரத்திற்கு ஒரு மனைவி தேவை என்பதால் வந்து போகிறார். நடிக்கவும், வசனம் பேசவும் அதிக அளவு இவருக்கு வேலை இல்லை.
தீப்ஷிகா நடிப்பு அருமை ஆனால் கதாப்பாத்திரத்துடன் ஒட்டவில்லை. வட இந்தியா மாடல் போல் இருக்கும் இவரை கீழ்சாதி பெண் என சொல்வது படத்துடன் சேரவில்லை.
படத்தின் நகைச்சுவை கதாப்பாத்திரம் என்று படத்திற்கு தேவை இல்லாமல் தினித்ததன் மூலம் படத்திற்கு வேகத்தடை போல சொதப்பல். முக்கிய காட்சியில் கிழவிகளை கட்டி பிடித்து காமெடி என்னும் பேரில் காட்சியின் போக்கை சிதைத்து விட்டார்.
சேரனின் தங்கை தீப்ஷிகாவை மேல்சாதி அருள்தாஸ் நடுரோட்டில் அடித்தற்கும், மேல் சாதியை சேர்ந்த துருவ்வை காதலித்தது இதற்கு விளக்கம் தர இயக்குநர் மறந்து விட்டார்.
இசக்கி கார்வண்ணன் எழுத்து – இயக்கத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளார். இதனை பெரிய நடிகர்களை வைத்து வேலை வாங்குவது என்பது அவ்வளவு சிறிய விஷயம் இல்லை. அதை அற்புதமாக செய்துள்ளார். அதுவும், கூடுதலா தயாரிப்பாளர் பொறுப்பு. இதற்காக இசக்கி கார்வண்ணன் அவர்களுக்கு சபாஷ் போடலாம்.
சாம் சிஎஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை புதுவித பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் ராஜாங்கம் செய்துள்ளார்.
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு மிக மிக சிறப்பு. வீரசமர் கலை இயக்கம் மிக நேர்த்தி. ஆர் சுதர்ஷன் படத்தொகுப்பு தெளிவாக இப்படத்தை அனைவரும் விரும்பும்படி தெளிவாக வழங்கியுள்ளது.
நடன இயக்குனர் & சண்டைக்காட்சி இயக்குனர் பாராட்டுக்குரியவர்கள்.
“தமிழ்க்குடிமகன்” திரைப்படம் கிராமிய வாழ்வியல் நம் கண்ண முன் நிறுத்துகிறது. இன்றும் இது போல் குலத்தொழில் குறிப்பிட்டு மேல்சாதி – கீழ்சாதி என பிரித்து பார்ப்பது வழக்கத்தில் உள்ளது. அடிமைத்தனம் இன்னும் நம் நாட்டை விட்டு வெளியே போகவில்லை என்பது மட்டுமில்லாமல் அவரவரது தொழில் செய்யும் உரிமை அவர்களிடமே உள்ளது என்பதை இந்த உலகத்திற்கு தெளிவாக சொல்லியிருக்கிறது.
“தமிழ்க்குடிமகன்” இந்திய திரைப்படங்களில் சிறந்த படம் என்ற வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும். குடும்பத்துடன் பார்க்க கூடிய படம். அனைவரும் ரசிக்கும்படி உருவாக்கப்பட்ட படம். மனதிற்கு பிடித்த படம் பார்த்த திருப்தி இப்படம் தருகிறது.
*TAMILKUDIMAGAN:*
*CAST:*
CHERAN – CHINNASAMY
LAL – SUDALAIYANDI
SRIPRIYANKA – PARVATHY
VELA RAMAMURTHY – GANDHI PERIYAR
S.A.CHANDRASEKHAR – SUBBAIAH
ARULDASS – ESAKKI
RAVIMARIYA – ADVOCATE
RAJESH – JUDGE
MAILSAMY – ADVOCATE
DHURVA – KITTU
DEEPSHIKA – VALLI
SURESH KAMATCHI – ANTHONYSAMY
MU.RAMASAMY – PECHIMUTHU
*CREW:*
Production Banner – Lakshmi Creations
Produced by – Esakki Karvannan
Written & Directed by – Esakki Karvannan
Director of photography – RAJESH YADAV
Music – Sam C.S.
Editor – R.sudharsan
Stunt – Sakthi Saravanan
Dance Choreography – Dinesh
Art – Veera Samar
Costumes – Rangasamy
Lyrics – Viveka, Sam C.S., Eknath
Design – Dinesh Ashok
Sound Designer – Lakshminarayanan A.S.
Effects – Sethu
PRO – Nikil Murukan
#tamilkudimaganmoviereview #tamilkudimaganmovie #tamilkudimaganreview #tamilkudimagan #movie #review #moviereview #tamilmovie #tamilmoviereview #fdfs #audience #theatre #audiencereview #theatrereview #boxoffice #film #cinema #flick #fans #filmbee
மதிஒளி ராஜா